செவ்வாய், 24 மார்ச், 2015

குஷ்பூ : இது நிலம் திருட்டு சட்டம்தான்! திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குஷ்ப உங்களோட அனுமதி இல்லாமல் உங்கள் இடத்தை எந்த நேரமும், எப்ப வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வதற்கு பேர்தான் நில கையக்ப்படுத்தும் சட்டம். இதனை சட்டம் என்று சொல்லுகிறார்கள். இதற்கு நான் திருட்டு சட்டம் என்று சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்த சட்டம் சில திருத்தங்களுடன் இருந்தது. விவசாயிகளின் நிலத்தை எடுக்க மாட்டோம் என்று சொல்லி இருந்தது. ஆனால் இந்த மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று பேசினார். தனியார் நிறுவன முதலாளிகளுக்காக இந்த சட்டத்தை சவுகரியம் செய்து கொடுக்கிறார்.இந்தப் பகுதிகளை நாம் டெல்டா பகுதி என்று சொல்லுகிறோம். இது கொஞ்சள் நாள் கழித்து அதானி டெல்டா, மோடி டெல்டா, அம்பானி டெல்டாவாக மாறிவிடும். எல்லையில் போராடுகிற ராணுவ வீரனும், நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் ஒன்றுதான6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு இந்த மோடி, அதானிக்கு கொடுத்துள்ளார். எங்கேயாவது இந்த அநியாயம் நடக்குமா.

கருப்பு பணத்தை வெளியில்கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவதாக கூறினார். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு கொடுக்க சொல்லுங்க கொடுப்பீங்களா. ஒரு ஏக்கர் கொடுத்தால் ஒரு கோடி சம்பாதித்து விடுவோம்.

44 வருஷம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் எந்த மதக் கலவரமும் இல்லை. பாஜக ஆட்சி வந்த பிறகு எனக்கு பயமாக இருக்கிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியன் என்று சொல்கிற காலம் மாறி, நான் இந்து, நான் முஸ்லிம், நான் கிருஸ்தவன் என்ற நிலையை ஏற்படுகிறார்கள். இவ்வாறு குஷ்பு பேசினார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக