வியாழன், 19 மார்ச், 2015

பெரியாரை பற்றி தெரியாத பத்ரி சேஷாத்ரி அய்யர் கிழக்கு பதிப்பகம் நடத்துகிறார் !

டைம்ஸ் ஆப் இந்தியா, புதுடில்லி பதிப்பில் (11.3.2015) ஒரு கட்டுரை;அதில் தந்தை பெரி யாரைப் பற்றிய ஒரு கருத்து:
”Periyar never intended to create a casteless society. His primary goal was to pull down the brahminical power structure and impose a non-brahminical, non-dalit, intermediate caste hold on political and administrative power in the state. He succeeded in this”
அதாவது, பெரியார், ஜாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் என ஒரு போதும் நினைக்கவில்லையாம்; அவரது முதன்மையான நோக்கம், பார்ப்பன அதிகார அமைப்பை தகர்த்து, அரசியல், நிர்வாக அதிகாரத்தில், பார்ப்பனரல்லாத, தலித் அல்லாத, இடை நிலை ஜாதியினரின் பிடிப்பை திணிப்பதுதானாம்; அதில் அவர் வெற்றியும் அடைந்தாராம்.
இப்படி ஒரு கருத்தை எழுதி யவர் யாராக இருக்கும்?
அனேகமாக வேற்று கிரகவாசி யாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றும். இல்லாவிட்டால், ஏதோ ஒரு முட்டாள் உளறி இருக்கிறான் எனவும் நினைக்கத் தோன்றும். ஆனால், அப்படி எல்லாம் அப்பாவியாக நினைக் காதீர்கள்.
இப்படி ஒரு கருத்தை எழுதிய அடி முட்டாள் யார் தெரியுமா? நம்மூர் மாமா, பத்ரி சேஷாத் திரிதான்.  ஆமாங்க, இந்த கிழக்குப் பதிப்பகம்னு ஒரு நிறுவனம் நடத்துறார்ல அந்தாளு தான்.
முதலில் இந்த ஆளுக்கு கிழக்கு எந்தப் பக்கம் இருக்கும்னு தெரி யுமான்னு தெரியலை; புத்தகப் பதிப்பாளர்னா, புத்தகத்தைப் படித்துப் பார்த்து அப்புறம் அதை பதிப்பிப்பவர்னு நாம நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனால், பத்ரி எழுதுன கட்டு ரையில் பெரியாரைப் பற்றி எழுதிய கருத்தைப் படித்தபோது, இந்த ஆளுக்கு பெரியாரைப் பற்றியும் தெரியலை; தமிழ் நாட்டு வர லாறும் தெரியலை; புத்தகம் போட றது ஒரு பிழைப்பா நடத்திக்கிட்டு இருக்கார்னு மட்டும் தெரியுது. தன் வாழ்நாள் முழுவதும், ஜாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும் போராடிய ஒரு புரட்சிக்காரரை பத்தி தெரியாம என்னய்யா நீ ஒரு புத்தகப் பதிப்பாளர்?
அம்பி பத்ரி, பெரியார் இங்கே போராடலன்னா, உங்க பேரு வெறும் பத்ரி சேஷாத்திரின்னா இருக்கும்; பத்ரி சேஷாத்திரி அய்யங்கார்ன்னுல்ல இருக்கும். அந்த ஜாதிவாலை கட் பண்ணது எங்க அய்யாவின் கத்திரிக்கோல் தானே. நீ மட்டும் இல்லை, உங்க கூட்டமே, அதுவரைக்கும் ஜாதிப் பெயரை பின்னாலே ஒட்டிக்கிட்டு, ஜம்பமா திரிஞ்சதை, ஒரு மாநாட் டுத் தீர்மானம் மூலமா சுமார் 85 ஆண்டுக்கு முன்னாலேயே எங்க அய்யா, வெட்டிப் போட வைச்சார். அது உங்க பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாங்கன்னா, கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்குங்க, பத்ரி. இப்படி அபிஷ்டு மாதிரி எல்லாம் எழுதக் கூடாது. ரொம்ப தப்பு. அம்புட்டு தான் சொல்ல முடியும். - குடந்தை கருணா   viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக