சனி, 21 மார்ச், 2015

வடிவேலுவின் அடுத்த ஜோடி சதா

ஜெயம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான சதா, இப்படத்திற்குப் பிறகு ‘எதிரி’, ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழிப் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ‘புலி வேசம்’ என்னும் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விஷாலுடன் இணைந்து ‘மத கஜ ராஜா’ படத்தில் குத்தாட்டம் ஆடினார். இந்தப் படம் வெளிவராமல் கிடப்பில் இருக்கிறது. இதையடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் சதா, தற்போது வடிவேலு நடித்து வரும் ‘எலி’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். ‘எலி’ படத்தில் சதா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெனாலி ராமன் படத்தை இயக்கிய யுவராஜே மீண்டும் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை இயக்கி வருகிறார். வித்யாசாகர் இசையமைத்து வரும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக