ஞாயிறு, 22 மார்ச், 2015

ஓடிப்போன ராகுல்காந்தி ! சோனியா மீண்டும் அதிரடி அரசியல்!

புதுடில்லி: ஒரு மாத காலமாக எங்கிருக்கிறார் என தெரியாமல், மாயமாக உள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, அவரின் தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியா, மறைமுகமாக பாடம் கற்பித்துள்ளார். கட்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தானே முன்னின்று நடத்தி, 'நீ இல்லாவிட்டால் என்ன, என்னால் முடியும்!' என, ராகுலுக்கு, சோனியா மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், அதிரடி அரசியல் நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற, காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி யின் துணைத் தலைவராக, 'மகுடம்' சூட்டப்பட்ட ராகுல், அதன்பின் நடைபெற்ற, பல மாநில சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை முன்னின்று நடத்தினார். அனைத்து பொறுப்பு களையும் அவரே மேற்கொள்ள, தேர்தல் முடிவு கள், காங்கிரசுக்கு படுதோல்வியை கொடுத்தன. ஒரு தேர்தல் இல்லை என்றாலும், இன்னொரு தேர்தல் தன் தலைமையை, வெற்றி மூலம் நிரூபித்துக் காட்டும் என, எண்ணியிருந்த ராகுலுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், மிகவும் சோர்வடைந்திருந்த ராகுல், கட்சிக் கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல், கட்சித் தலைமையகம் செல்லாமல் இருந்தார்.   வடிவேலு 23ம் புலிகேசி....இவரு 24ம் புலிகேசி...விளங்கிடும் போங்க...


இந்நிலையில், கடந்த மாதம், பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பார்லி மென்ட் கூடிய போது, திடீரென காணாமல் போன ராகுல், எங்கிருக்கிறார் என, பலரும் தேடிய போது, 'அவர், ஒரு வார கால விடுமுறையில் சென்றுள்ளார்' என, காங்கிரஸ் மேலிடம் பதிலளித்தது.

வாக்குவாதம்:

நிலைமை இவ்வாறு இருக்க, நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் சூடான விவாதங்கள், வாக்குவாதங்கள், அமளிகளை நடத்தி கொண்டிருக்கையில், ராகுலை மட்டும் காணவில்லை.

பேரணி:

அந்தக் குறை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, அவரின் தாய் சோனியாவே, விவாதங்களை முன்னின்று நடத்தினார்; மசோதாக்கள் மீதான விவாதங்களில், காரசாரமாக உரையாற்றினார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கடிதம் எழுதி, போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதுபோல, கட்சியின் முக்கிய முடிவுகளையும் அவரே மேற்கொள்கிறார்.

மறைமுக பாடம்:

இதன் மூலம் அவர், மாயமாகியுள்ள ராகுலுக்கு மறைமுக பாடம் கற்பிக்கிறார் என்கின்றனர், டில்லி அரசியல் பார்வையாளர்கள். 'நீ இல்லாவிட்டால் என்ன, என்னால் கட்சி வளர்ச்சிப் பணிகளை தனியாக மேற்கொள்ள முடியும்; கட்சியையும், அரசையும் நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ வேண்டுமானால், ஒதுங்கிக் கொள்' என, சொல்வது போல, சோனியாவின் செயல்பாடுகள் உள்ளன.

அதிர்ச்சி:

உடல் நலமில்லாத நிலையிலும், சோனியாவின் போராட்ட குணத்தையும், அவரின் தீவிரத்தையும் பார்த்து, எதிர்க்கட்சி வட்டாரங்கள் அதிர்ந்து போயுள்ளன. எனினும், ராகுலிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இன்றோ, நாளையோ, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைய உள்ள நிலையில், ராகுல் எங்கிருக்கிறார், எதற்காக அவர், நீண்ட விடுப்பில் உள்ளார் என்ற தகவல்கள் தெரியாததால், காங்கிரசிலும் குழப்பம் நிலவுகிறது.

ராகுல் எங்கிருக்கிறார்; என்ன செய்கிறார்?

ஆண்டுக்கு சிலமுறை வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் ராகுல், எந்த நாட்டுக்குச் சென்றார்... அங்கு அவர் எங்கு தங்கினார் என்பது போன்ற விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். அது போலவே, ராகுலும் தன் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பிற தகவல்களை வெளியிடுவதில்லை. சில நேரங்களில், பெயரளவுக்கு கட்சி மற்றும் பார்லிமென்ட் விவகாரங்களில் தலையிடும் ராகுல், இந்த முறை, நீண்ட விடுப்பு எடுத்தது போல, பொதுமக்கள் பார்வையில் படாமல் உள்ளார். தேர்தல் தோல்விகளால் துவண்டுள்ள அவர், காங்கிரஸ் கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனையில் உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தகவல்கள், அவர் உள்நாட்டிலேயே இல்லை என்றும் கூறுகின்றன.

பெயர்: ராகுல்
வயது: 44 (19.06.1970)
பெற்றோர்: ராஜிவ் - சோனியா
படிப்பு: டில்லி பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், ரோலிங்ஸ் கல்லூரி, டிரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேலும் இஷ்டப்பட்ட உலக பல்கலை கழகங்களின் பெயர்களையும் சேர்த்துகொள்ளவும்
கட்சி பொறுப்பு: காங்கிரஸ் துணைத் தலைவர்
உடன் பிறந்தவர்: பிரியங்கா
எம்.பி.,: அமேதி தொகுதி, உ.பி., தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக