புதன், 25 மார்ச், 2015

பெங்களூர் அதிகாரி மரணம்! சி சி டி வி கமெரா பதிவுகளை அழித்த போலீஸ்!


பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், முக்கிய சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மணல் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே.ரவி, கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினரின் தொடர் போராட்டத்தையடுத்து இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான முக்கிய காட்சிகளை விசாரணை அதிகாரிகள் அழித்துவிட்டதாக அதிகாரி ரவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபற்றி அவரது மாமனார் கூறுகையில், “சி.ஐ.டி. போலீசார் எனது வீட்டிற்கு வந்து சிசிடிவி பதிவுகளை வாங்கிச் சென்றனர். பின்னர் அந்த சாதனத்தை திரும்ப ஒப்படைக்கும்போது, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. அந்த பதிவுகள் இருந்திருந்தால், ரவி இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த நபர்களை கண்டுபிடிக்க உதவியாக இருந்திருக்கும்” என்றார்..maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக