திங்கள், 2 மார்ச், 2015

அவிஜித் ராய் ! வங்கதேசத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க பகுத்தறிவு எழுத்தாளர் .

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணைய எழுத்தாளர் வங்காளதேசத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.தீவிரவாதத்துக்கு எதிராக  வலைப்பூவில் எழுதி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த அவிஜித் ராய்  என்ற பிரபல எழுத்தாளர், வங்காள தேசத்தில் நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்க சென்ற போது மர்ம நபர்கள்  சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில்,  எழுத்தாளர் அவிஜித் ராய் படுகொலைக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக நேற்று அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், அவிஜத் ராயை   படுகொலைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இது இரக்கமற்ற கோழைத்தனமான செயல்.
சிறந்த மனிதாபிமனமுள்ள அவிஜித்தின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை வலைதளத்திலிருந்து  அவிஜித் ராயின் புத்தகத்தை நீக்க வேண்டும் என்று ஷபியூர் ரகுமான் பாராபியிடமிருந்து  மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து பேஸ்புக்கில் எழுத்தாளர் ராய்க்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக ஷபியூர் ரகுமான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக