திங்கள், 9 மார்ச், 2015

கிக் பானம் குடித்து ரெஜினா கும்மாளம்

பங்கி அடிச்சேன்டி பான்பீடா போட்டேன்டி'  என பில்லா படத்தில் ரஜினிகாந்த் பாடியதுபோல் பாங்கு அடித்துவிட்டு கும்மாளம் போட்டார் ரெஜினா. சமீபத்தில் நடிகர், நடிகைகள் வண்ண பொடிகளை வீசி ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் இந்த ஆண்டுக்கான ஹோலியை மறக்க முடியாததாக்கிக் கொண்டிருக்கிறார் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா‘ ஹீரோயின் ரெஜினா. வண்ணப் பொடிகளை தூவி, ' ஹோலி ஹே'  என கும்மாளம் போடுவதற்கு முன் ‘பாங்கு‘ (போதை ஏற்றும் பானம்) பருகுவது வழக்கம். இலை மற்றும் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இதை வட இந்திய பெண்களும் ஹோலி சமயத்தில் குடிப்பார்கள். ரொம்ப நாட்களாகவே இந்த பானத்தை சுவைக்க வேண்டும் என்று ரெஜினாவுக்கு ஆசையாம். அதை இப்போது நிறைவேற்றிக்கொண்டார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பாங்கு குடித்து பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை. அதை குடித்த பிறகு என்ன உணர்வு ஏற்படும், எப்படியெல்லாம் செயல்படுகிறேன் என்பதை அறிய ஆவலாக இருந்தேன். இந்த அனுபவம் ரொம்பவே நன்றாக இருந்தது. தோழிகளுடன் ஹோலி கொண்டாடியபோது பள்ளி வயது ஞாபகங்கள் வந்துவிட்டது' என்றார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக