செவ்வாய், 3 மார்ச், 2015

ராஜ்ய சபாவில் அலப்பறை பாடிய அதிமுக பெண் எம்பி விஜிலா! அரிதார தலைவியின் ஓவர் அரிதார எம்பி

தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது. ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென, 'சிந்து நதியின் மிசை நிலவினிலே..' என, ராகம் போட்டு பாட ஆரம்பித்தார். பாரதியாரை மேற்கோள்காட்டி பாடினாலும், கைகொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி கணேசன் வாயசைத்து பாடிய, அந்த திரையிசைப் பாடலின் ராகத்தில், அப்படியே ஏற்ற இறக்கத்துடனும், முகபாவனையுடனும் பாடிக் கொண்டே போனார்.   மூஞ்சி நிறைய பவுடர் அப்பி தலை நிறைய பூ வெச்சு கம்மல் போட்டு ஆள அடிக்குற செவப்பு கலர் வித் கோல்டன் கலர் பார்டர் போட்ட அங்கி அணிய வெச்சு......... ஒ இதுக்கு பெயர்தான் எம் பி பதவீல உக்கார வெச்சு அழகு பாக்குறதா ?
சபையில், மற்ற எம்.பி.,க்கள், 'என்ன இது' என பார்க்க ஆரம்பிக்க, சபை தலைவர் இருக்கையில் இருந்த குரியனும், தலையை ஆட்டி, பாட்டை ரசித்துக் கொண்டே, "யெஸ்... குட்... திஸ் ஸ் டூ பி என்கரேஜ்...” என்றார். ராகத்தோடு பாட்டு ஒரு பக்கம், அதை ஊக்கப்படுத்தும் குரியன் மறுபக்கம் என, பார்த்த எம்.பி.,க்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால், நடந்ததோ வேறு; ஓரிரு வரிகளுடன் முடிக்காத விஜிலா சத்யானந்த், தொடர்ச்சியாக அந்த பாட்டின் அடுத்தடுத்த வரிகளையும் தொடர்ந்தார். 'முழு பாடலுமா!?' என, அதிர்ச்சியடைந்த குரியன், "விஷயத்திற்கு வாருங்கள்” என, பரபரத்தார்.




மூத்த எம்.பி.,க்கள் குபீர்:

அதற்கு, "விஷயமே இதுதான்” எனக் கூறிவிட்டு, வரிக்குவரி விளக்கம் அளித்து பாடலையும் தொடர, அனைவருக்கும் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மூத்த எம்.பி.,க்கள் அம்பிகா சோனி, அஸ்வினி குமார் என, ஒரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க, விஜிலாவுக்கு பக்கத்திலும் பின்னாலும் இருந்த, மனோஜ் பாண்டியனும், ரபி பெர்னாட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். அருகில் இருந்த பிற எம்.பி.,க்களுக்கு, அந்த இருவரும் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த குரியன், "விஜிலா, விஷயத்தை பேசுங்கள்” என்று வலியுறுத்தவே, வேறு வழியின்றி, "காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 3 நிமிட ஒதுக்கீட்டில், பாட்டு பாடுவதற்கு, 2 நிமிடம் எடுத்துக் கொண்ட விஜிலா சத்யானந், மீதமுள்ள ஒரு நிமிடத்தில், 3 முறை அம்மா நாமம் உச்சரித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், மைக் ஆப் செய்யப்படவே, பேச வேண்டிய கோரிக்கையை பேசாமல், அந்தரத்திலேயே தொங்க விட்டுவிட்டு அமர நேர்ந்தது.



அபாயம்:

ஒட்டுமொத்த சபையும், 'அம்மா' 'அம்மா' என எடுத்துக் கொடுத்து, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க., - எம்.பி., சிவா எழுந்தார். அவரையும் பாட்டு பாட சிலர் கேட்க, அவரோ மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை கட்டிக்காக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,” என்றார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக