சனி, 28 மார்ச், 2015

நடிகை கங்கனா : தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன்

தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன் என வேதனையுடன் கூறினார் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத்.‘குயின்' இந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார். அவர் கூறியது:கேங்ஸ்டர் இந்தி படத்தில் நடித்தபிறகு என்னிடம் நடிப்பு திறமை குவிந்திருப்பதாக கூறினார்கள். தேசிய விருது என்பது பிராந்திய படங்களின்  நடிப்புக்கான கணக்காகவும் எடுத்துக் கொள்ளப்படுவதால் அதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் நான் மதிப்பு குறைவாக நடத்தப் பட்டிருக்கிறேன். தீண்டத்தகாத பெண்போல் பாவித்ததுடன் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதற்கு எனது தரப்பிலிருந்து நான் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. நான் பேசும் பாணி, உடை அணியும் தன்மை போன்றவற்றையும் கேலி செய்வார்கள். ஒரு கட்டத்தில் தீவின் நடுவே அகப்பட்டுக்கொண்ட நபர் போலவே என் நிலைமையும் ஆனது.
அது எனக்கு பயத்தை கொடுத்தது. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தேன். நடிகை என்ற வகையில் இப்போதுதான் எனக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  பலரும் என்னை வெறுத்து ஒதுங்கியபோது பிரியங்கா சோப்ரா மட்டும் என்னிடம் நன்கு பழகினார். இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரு தோழி அவர்தான்.இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக