வியாழன், 5 மார்ச், 2015

ஆவணப்படத்தை பாஜக அரசு ஏன் தடை செய்யவேண்டும்? BBC யின் ஆவணபடத்தால் பண்பாட்டு சாயம் வெளுக்கிறது?

இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும்: ஜோதி சிங்கின்  தந்தை நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக உருவாக்கப்பட்ட இப்பேட்டியை பி.பி.சி. தொலைக்காட்சி நேற்று பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் ஒளிபரப்பியது.ஆனால், இந்தியாவில் இந்திய ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பி.பி.சி. கூறுகையில், நிர்பயாவின் பெற்றோர் ஒத்துழைப்புடன் தான் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டதென்றும், அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது என்றும் கூறியது.


ஆனால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த ஆவணப்படம் குறித்து ஆவேச விவாதம் நடைபெற்றது. அதன் பின் இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

 இந்நிலையில் ஜோதிசிங்கின் தந்தை தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், குற்றவாளியின் வாக்குமூலம் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அவர் மேலும், சிறையில் உள்ள போது இப்படி பேசும் அந்த நபர் வெளியிலிருந்தால் எப்படி பேசுவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆவணப்படம் என்ன நடக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க ஏன் இந்த ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என எனக்கு புரியவில்லை. ஆனால் நாடு ஒரு முடிவை எடுக்கும்போது, நாம் அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று  கூறினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக