செவ்வாய், 24 மார்ச், 2015

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட்

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது./tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக