புதன், 11 மார்ச், 2015

குஜராத்திலிருந்து 40 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட குட்கா: மடக்கிப் பிடித்த மகாராஷ்டிர போலீசார்

மகாராஷ்டிர மாநிலத்தில் 2012 ஆண்டு ஜூலை முதல் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள காஷ்மீரா மாவட்டத்தில் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா மற்றும் குட்காவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். நெடுஞ்சாலை வழியாக குட்கா கடத்தப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று மதியம் காஷ்மீராவில் உள்ள மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான டெம்போ ஒன்று வருவதைக் கவனித்தனர். போலீசைப் பார்த்ததும் உஷாரான டெம்போ டிரைவர் அலி வண்டியை நெடுஞ்சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்தார். அவரை துரத்திப் பிடித்த போலீசார் அலியை ரிமாண்ட் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மதுவிலக்குன்னு பெரிசா பேசுறாய்ங்க ஆனா குட்கா பான்பராக்  எல்லாம் இந்தியா பூரா அவிங்கதானே சப்பிளை !


அலி ஓட்டி வந்த வேனில், 40 மூட்டைகளில் இருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள் குட்கா பொருட்களையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குஜராத்தில் இருக்கும் குட்கா தயாரிப்பாளரும் அந்த டெம்போவின் உரிமையாளருமான நபரை விசாரணைக்கு அழைத்து வர குஜராத் போலீசுக்கு தகவலளித்துள்ளனர்  .

குஜராத் மாநிலத்திலும் 2012 செப்டம்பர் முதல் குட்கா பொருட்களுக்கு தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக