வெள்ளி, 6 மார்ச், 2015

தமிழகத்துக்கு ரூ. 4 லட்சம் கோடி கடன்! திவாலாகும் நிலையில் தமிழக அரசு?

திமுக செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்களை நிறைவு செய்திருக்கிறார். இந்த காலம் நிர்வாகக் குழப்பம் மேலும் ஆழமாக  வேரூன்றி, முக்கிய முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்பட முடியாத அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டிய காலமாகவே இருந்துள்ளது.திமுக ஆட்சியில்  தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதோடு, 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள சிக்கல்களை அகற்றி  உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்காமலும், கல்வித் துறையிலும், மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் மற்றும் பல துறைகளிலும் ஏற்பட்ட  பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமலும், குறிப்பாக 2014ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல் துறை  அதிகாரிகளின் மாநாட்டினைக் கூட நடத்த முற்படாமலும், மாநில நிர்வாகம் சூறாவளி காற்றில் சிக்கிய படகைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது.

முடிவடைந்த திட்டங்களுக்கு திறப்பு விழா கூட நடத்தாமல், யாரோ ஒருவருடைய வருகைக்காக காத்திருக்க வேண்டியவர்களாக அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள்.   தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் இந்த ஆட்சியில் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவருகின்றன. விவசாயிகள், மீனவர்கள்,  நெசவாளர்கள் ஆகியோர்தம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல், வளர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழக அரசின் மொத்தக் கடன் நான்கு  லட்சம் கோடி ரூபாயைத்தாண்டி விடும் என அபாய அறிவிப்பு செய்யப்பட்டு, அதிமுக அரசு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, திவால் நிலையை  நெருங்கிக்கொண்டிருக்கிறது;

மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் உரிய காலத்தில் தேவையான கவனம் செலுத்தாததால் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு  தமிழக நிர்வாகம் அனைத்து வகையிலும் சிதைந்து சீர்கெட்டு, ‘இந்தியாவிலேயே கடைசி மாநிலம் என்ற அவப்பெயரைத் தமிழகத்திற்குத் தேடித் தந்துள்ளது.  இவற்றைக் கருத்திலே கொண்டு, தற்போதைய செயலற்ற, சீர்கேடான நிலைக்குத் தமிழகத்தை உள்ளாக்கிய அதிமுக அரசுக்கு தனது கடுமையான கண்டனத்தை  இந்தச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

* 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, நாட்டின்வளர்ச்சிக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கும் பல்வேறு புதிய
திட்டங்கள் வரிசையாக நடைமுறைக்கு வரும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத்  திணிக்க முயற்சிப்பதும்  தொடர்ந்து இந்தி மொழியை அலுவலக மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கிடக் காரியமாற்றுவதும்  இந்திய  ஒருமைப்பாட்டிலும், சமத்துவக் கொள்கையிலும் நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாக இல்லை. மேலும் மதவாதப் போக்கிற்குத் துணை  போகின்ற வகையில், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு, அந்த மாநில பாஜ. அரசு அனுமதி  வழங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகின்றது.
* தமிழகச் சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியும், முன்னாள் முதலமைச்சரைப் பற்றியும்  எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மனம் போனபடித் தரம் தாழ்ந்து விமர்சிக்கலாம். அதே நேரத்தில் ஜெயலலிதா போற்றிப் புராணத்திற்கு மட்டுமே அனுமதி  வழங்கப்பட்ட ஆஸ்தான மண்டபமாகவே தமிழக சட்டப் பேரவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியிலான விவாதங்களுக்கோ, மக்கள்  பிரச்சினைகளை எழுப்புவதற்கோ வாய்ப்பின்றி சட்டப் பேரவை அ.தி.மு.க. பேரவையாகவே மாற்றப்பட்டிருக்கும் மாபாதகத்தை இச்செயற்குழு வன்மையாகக்  கண்டிக்கின்றது.
* ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், ஆளுங்கட்சியினரின் அராஜக சேட்டைகள், அச்சுறுத்தல்கள், கட்டுப்பாடற்ற தேர்தல் விதி மீறல்கள், ஜனநாயகப் படுகொலை ஆகிய  ஏராளமான எதிர்மறை அம்சங்களின் அரங்கேற்றத்திற்குப் பின்னரும், தி.மு.கழக வேட்பாளருக்கு வாக்களித்த 55,044 வாக்காளர்களுக்கும் இந்தச் செயற்குழு  இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.
* தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு என்பது, கேள்வி கேட்பாரற்று அனாதையாகிக் கிடக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியில்  கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்,  கூலிப்படையினர் எல்லாம் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி குதூகலத்துடன் நடமாடும் கோட்டமாகவும்; பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் தங்களுடைய  கைவரிசையைக் காட்டும் களமாகவும் தமிழ்நாடு மாறி; பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், மாநிலத்தின் பாதுகாப்புக்குச் சவாலாகவும் இருந்து வருகிறார்கள்.  இதற்கு செயற்குழு தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* தமிழக மீனவர்களின் துயரங்கள் நீங்கிய பாடில்லை. மோடி, சிறிசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின்  தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு  தொடர்பு கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையைக் காதில் போட்டுக் கொண்டதாகவே  தெரியவில்லை; காலதாமதம் செய்து வருகிறது. இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய  வேண்டுமெனவும்; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு ஏற்படும் வரையிலாவது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் இச்செயற்குழு  மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது.
* மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றபோது, சாதாரண, நடுத்தர மக்களுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் ஆட்சி நடத்துவோம் என்று உறுதி கூறினார்கள்.  தேர்தல் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சலுகை அளிப்போம் என்றார்கள். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் ஏழையெளிய மக்களைப் பாதிக்கும்  வகையிலேயே அமைந்துள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பது போன்ற சாமான்ய மக்களின்  உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள்  வாரி வழங்கப்படு கின்றன. மேலும், இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் என்பது வாரம் ஒரு முறை தொடருகிறது. சாதாரண ஏழை நடுத்தர  மக்களைப் பாதிக்கும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்திய பாஜ அரசு முற்றுப்புள்ளி வைத்து, தேர்தலுக்கு முன்பு தாங்கள் அளித்த  வாக்குறுதியைக் காப்பாற்ற முன் வரவேண்டுமென்று மத்திய அரசை திமுகழகத்தின் இந்தச் செயற்குழு வற்புறுத்திக்கேட்டுக் கொள்கிறது.
* காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கடந்த 2013ல் அரசு கெஜட்டில் வெளியிட்டது. இந்தத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் காவேரி  மேலாண்மை வாரியத்தையும்  காவேரி ஒழுங்கு முறைக் குழுவையும் மத்திய அரசு 19.5.2013க்குள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த  அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை. மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டு மென திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செயற்குழு வலியுறுத்துகிறது.
* சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கின்றது. ஒட்டுமொத்தமாக அனைத்துவகை வாகன  ஓட்டுநர்களையும் பாதிக்கக் கூடிய தண்டனை முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அனைத்து ஓட்டுநர்களும் சிறைச்சாலைக்குச் செல்லக் கூடிய  அபாயம் இக்கொடுமையான சட்ட முன்வடிவில் உள்ளது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள இச்சட்ட முன்வடிவை கைவிட வேண்டுமென இச்செயற்குழு  வலியுறுத்துகிறது.
* அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3000 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட மாநில ஆதார விலை  ரூ.650ஐ ஆண்டொன்றுக்கு ரூ.100 வீதம் குறைத்து வந்துள்ளது. இந்தக்குறைக்கப்பட்ட தொகையையும் 2 ஆண்டுகளாக தனியார் ஆலைகள் வழங்காமல் டன்  ஒன்றுக்கு ரூ.2,650 பதிலாக ரூ.2,200 மட்டுமே வழங்கி வருகிறார்கள்.கரும்பு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய்  விலை என்பதை ஏற்றுக்கொண்டு அறிவிக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=71531#sthash.MPapb7oN.dpuf

* அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3000 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட மாநில ஆதார விலை  ரூ.650ஐ ஆண்டொன்றுக்கு ரூ.100 வீதம் குறைத்து வந்துள்ளது. இந்தக்குறைக்கப்பட்ட தொகையையும் 2 ஆண்டுகளாக தனியார் ஆலைகள் வழங்காமல் டன்  ஒன்றுக்கு ரூ.2,650 பதிலாக ரூ.2,200 மட்டுமே வழங்கி வருகிறார்கள்.கரும்பு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய்  விலை என்பதை ஏற்றுக்கொண்டு அறிவிக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - /tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக