திங்கள், 9 மார்ச், 2015

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 12 லட்சம் லஞ்சம் கேட்டதால் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை.......

நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வேளாண் துறையில் 4 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு, அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தொல்லை கொடுத்த தால், நெல்லை மாவட்ட வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் எழுந்தது.
பதவிகள் பறிப்பு
அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து உடனடி யாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வலி யுறுத்தினர். அதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நெல்லை ரயில் நிலை யத்தில் ரயில் முன் விழுந்து வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார சாமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை நெல்லை ரயில் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலை வர் அசோக்குமார் நேற்று உத்தர விட்டார் tamil.thehindu.com/ படத்தில் இருப்பவர் வேளாண்துறை பொறியாளர் முத்து குமாரசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக