சொத்துக் குவிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு
அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று கோரும் திமுக பொதுச்
செயலர் க.அன்பழகனின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று
(புதன்கிழமை) உத்தரவிட்டது.
சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி
திமுக சார்பில் க.அன்பழகன் செய்திருந்த மனு மீதான உத்தரவை கர்நாடக உயர்
நீதிமன்ற நீதிபதிகள் என்.குமார் மற்றும் பி. வீரப்பா ஆகியோர் அடங்கிய
அமர்வு பிறப்பித்தது.
சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டால், வழக்கின் கடைசி வரை அவரே ஆஜராகி
வாதிடலாம் என்றும், பவானி சிங் அரசு வழக்கறிஞராகத் தொடர்வதற்கு கர்நாடக
அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும் அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அன்பழகன் செய்திருந்த மனு மீதான விசாரணையில் அவரது வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் பிப்ரவரி 6-ஆம் தேதி வாதாடும்போது, ““வழக்கு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் கர்நாடக அரசு தான் அரசு வழக்கறிஞரை நிய மிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அரசு வழக்கறிஞரை நியமித்துள்ளது. இதனால் நீதியை நிலைநாட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி சிங்கின் நியமனம் சட்டத்துக்கு எதிரானது'' என வாதிட்டார்.
இதற்கு பவானி சிங்கின் வழக்கறிஞர் நாகானந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “கர்நாடக அரசு தான் இவ்வழக்குக்கு பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது. மேல்முறையீட்டுக்கு தனி ஆணை வழங்க தேவையில்லை. இன்னும் 20 நாட்களில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பது தேவையற்றது. உச்ச நீதிமன்றம் கொடுத்த 3 மாத கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும்''என்றார்.
இதையடுத்து கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பேசும்போது, “பவானி சிங்குக்கு ஊதியம் கொடுப்பது தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான். அவரது நியமனத்தில் தவறு இல்லை. மேல்முறையீட்டில் கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழிமுறைகள் வழங்காததால், இதில் கர்நாடக அரசு தலையிட முடியாது'' என தெரிவித்தா /tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக