பீட்சா,
ஜிகர்தண்டா என இரு வெற்றிப்படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,
தமிழ்த்திரையுலகின் டிரெண்டையே மாற்றியவர் என்ற புகழையும் பெற்றிருக்கும்
கார்த்திக் சுப்பாராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் இறைவி.டைட்டில்
வைத்ததிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டுவரும் இப்படம் தற்போது
எதிர்பார்ப்பின் உச்சத்தை அடைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
கார்த்திக் சுப்பாராஜின் இரண்டு படங்களிலும் நடித்த விஜய் சேதுபதி, பாபி
சிம்மா, கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்தில் மீண்டும் இணைந்து
நடிக்கின்றனர். மேலும் இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும்
இத்திரைபப்டத்தில் ஒரு ஹீரோவாக நடிக்கிறார்.
ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றிய கேமராமேன் கேவிமிக்யூரி மற்றும் எடிட்டர் ஆண்டனி இந்த படத்திலும் பணியாற்றுகிறார்கள். கார்த்திக் சுப்பாராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இறைவி படத்திற்கும் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்மா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன் ஆகிய நால்வரின் காதல் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதையாம்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக