டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கும்,
அதன் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் தி.மு.க. தலைவர்
கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் டிவிட்டர் அக்கவுண்டை 'மென்சன்' செய்து கருணாநிதி
தனது டிவிட்டர் தளத்தில் வாழ்த்து செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கருணாநிதி கூறியுள்ளதாவது: டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றுள்ள இந்த
மிகப்பெரும் வெற்றிக்காக திமுக சார்பில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஜனநாயக மற்றும் தேர்தல் வரலாற்றில் இந்த வெற்றி பெரும் மைல்கல்
ஆகும். இந்த நாட்டின் மக்கள், எப்போதுமே மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின்
பக்கமே இருப்பார்கள் என்பதை உங்களது வெற்றி சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபித்து காண்பித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட
காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
மக்களின் மன நிலையை புரிந்து கொண்ட மத்திய அரசு, தனது நிர்வாக உதவிகள்
அனைத்தையும் உங்களுக்கு செய்து தரும். இவ்வாறு கருணாநிதி தனது வாழ்த்து
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக