செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

திமுகவின் கோரிக்கையை மதிமுக, பாமக, கம்யூ., வி.சி ஏற்றிருந்தால்..! மறைமுகமாக அதிமுகவுக்கு உதவிசெய்த ......

ன்னை: திமுக சார்பி்ல் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றிருந்தால் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருந்தால் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு நெருக்கடியை அதிகரித்துக் காட்டியிருக்கலாம். திமுக இந்தத் தேர்தலில் பெற்றுள்ள வாக்குகள் அதைத்தான் சொல்ல வருகின்றன. திமுக தோல்வியுற்றிருக்கலாம். ஆனால் கடுமையான அதிகார துஷ்பிரயோகம், வெளிப்படையான பண வினியோகம், ஓட்டுக்களை மொத்த மொத்தமாக விலைக்கு வாங்குவது என அதிமுக நடத்திக் காட்டிய அத்தனை விளையாட்டுக்களையும் தாண்டி திமுக வாங்கியுள்ள வாக்குகள், அந்தக் கட்சி ஓய்ந்துவிடவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. (அதிமுக செய்த இதே வேலையை திமுகவும் ஆளும் கட்சியாக இருந்தபோதும் பலமுறை செய்திருக்கிறது) எல்லா தகிடுதித்தங்களையும் தாண்டியும் திமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. கடந்த தேர்தலைவிட சற்று வாக்குகள் குறைவு அவ்வளவுதான், மற்றபடி அக்கட்சியின் நிலை நிலை குலையவில்லை. மாறாக மற்ற கட்சிகளின் வாக்குகள்தான் அதிமுகவுக்குப் போயுள்ளன. ஸ்ரீரங்கம் தேர்தலை திமுக மட்டுமே முக்கியமாக, சீரியஸாக எடுத்துக் கொண்டது. காரணம், இத்தேர்தலை நமது பலத்தை உரசிப் பார்த்து விடுவது என்பதே அதன் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தில் கிட்டத்தட்ட பாதி வெற்றி பெற்று விட்டது திமுக. தேர்தலில் தோற்றிருந்தாலும் கூட அதன் பலம் முழுமையாக தேய்ந்து போகவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் அதிமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை திமுக அமைத்தால் நிச்சயம் அதிமுகவுக்கு சிக்கல் என்பதையும் இந்தத் தேர்தல் மறைமுகமாக உணர்த்தியுள்ளது. இந்தத் தேர்தலிலேயே கூட திமுக தலைவரின் அழைப்பை ஏற்று, தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் என பலரும் இணைந்திருந்தால் நிச்சயம் வளர்மதியின் வெற்றி சிக்கலாகியிருக்கும். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் வெல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

/tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக