In the morning, Surat-based businessmen Suresh Agarwal
and Rajubhai Agarwal made a bid of Rs 1 crore and Rs 51
lakh respectively.அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது
ஒபாமாவை சந்தித்து பேசிய பிரதமர் மோடி ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ‘கோட்
சூட்’ அணிந்திருந்தார். அதில் நரேந்திர மோடி என்ற பெயர், வரிசையாக சிறிய
அளவில் பதிக்கப்பட்டிருந்தது.
இந்த விலை உயர்ந்த கோட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பிரதமர்
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கோட் சூட் அணியலாமா என்று
பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த கோட்
உள்பட தான் அன்பளிப்பாக வாங்கிய 455 பொருட்களை ஏலத்தில் விற்க பிரதமர் மோடி
அனுமதி வழங்கினார். அதன் படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த ஏலம்
நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் கலந்து கொண்ட சூரத்தை சேர்ந்த தொழிலதிபரான சுரேஷ் அகர்வால்
ரூ. 1 கோடிக்கு மோடியின் கோட் சூட்டை ஏலம் கேட்டார். தொடர்ந்து ஏலம்
நடைபெற்று வருகிறது maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக