திங்கள், 9 பிப்ரவரி, 2015

மாணவர்களின் சுயமரியாதையை இடித்து தள்ளும் பாத நமஸ்கார பள்ளி கூடங்கள்!

"சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் போற்றுதல் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்."  கண்காட்சியின் ஒரு நிகழ்வாக சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1008 ஆசிரியர்களுக்கு 1008 மாணவர்கள் பாத பூஜை செய்தனர். அப்போது தீர்த்த நீரால் ஆசிரியர்களின் பாதங்களை மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்அப்போது பல ஆசிரியர்கள் தங்களை மறந்து கண்கலங்கினர்.( முதல் தடைவையாக ஈகோவுக்கு தீனி கிடைத்த மகிழ்ச்சிதாய்ன்) . ஆசிரியர்கள் தங்கள் ஆணவ ஈகோவுக்கு தீனி போட மாணவர்களை பணியவைத்து குருர சந்தோசம் அடையும் சாடிஸ்ட் மனோபாவம் இதுதான். கல்லூரிகளில் புதிய மாணவர்களை  பழைய வக்கிரம் பிடித்த மாணவர்கள் ராக்கிங் செய்யும் சாடிசத்தை போலத்தான் இதுவும்,
இதே போன்று பெற்றோரையும் தினமும் வணங்க வேண்டும். இதனால் ஒழுக்கம், உறவு, பண்பாடு, கல்வி உள்ளிட்ட உயர் குணங்கள் மாணவர்களிடையே சிறுவயதிலிருந்து வளரும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து விழாவில் கலந்துகொண்ட ஆசிரியர் கலைச்செல்வி கூறியது: மாணவர்கள் அனைவரையும் ஈன்ற குழந்தைகளைப் போல கருதுகிறோம். இதனால், ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு வலுவாகிறது. மேலும், மாணவர்கள் மனதில் நற்பண்புகள் வளர ஆசார்ய வந்தனம் அவசியமாகிறது என்றார்.
இதுகுறித்து விழாவில் பேசிய மாணவி பிரியதர்ஷினி கூறியது: குரு என்பவர்கள் கடவுளின் அவதாரம் போன்றவர்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்,. பெற்றோர், பெரியவர்களையும் போற்றி வாழ வேண்டும் என்றார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக