வியாழன், 19 பிப்ரவரி, 2015

வோல்டாஸ் நில வழக்கு: கருணாநிதி குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?

சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் கைமாறிய விவகாரத்தை சிபிஐ மீண்டும் தோண்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவரிடம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி 2010-ல் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகி யோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர். அவ்வழக் கின் விசாரணை தற்போது நடை பெற்று வருகிறது.

இதனிடையே அலைக்கற்றை ஒதுக்கியதற்கு கைமாறாக சென்னை அண்ணா சாலை யில் உள்ள வோல்டாஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான இடம் திமுக தலைவர் கருணாநிதி குடும் பத்தாருக்கு (சங்கல்ப் இன்டஸ்ட்ரீஸ்) தரப்பட்டதாக நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், விசாரணைக்குப் பிறகு அந்த இடத்துக்கு உரிமையுள்ள டாட்டா நிறுவனத்துக்கு அதில் தொடர்பில்லை என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விவ காரத்தை தற்போது சிபிஐ மீண்டும் தோண்டியெடுத்து விசார ணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக பதவியேற்றதும், மத்திய கம்பெனி விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெரும் முறைகேடுகள் புலனாய்வுப் பிரிவு, வோல்டாஸ் நிறுவன நிலம் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு கைமாற்றப்பட்ட புகார் குறித்த விசாரணையை முடுக்கி விடப்பட்டது.
இதில், வோல்டாஸ் நிலம் கைமாறிய விவகாரத்தில் சந்தே கத்துக்கிடமளிக்கும் வகையில் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத் துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த சென்னை வந்த கம்பெனிகள் விவகார அமைச்சக அதிகாரிகள் புதிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர். முதற்கட்டமாக இதுதொடர்பாக திமுக தலை மையின் குடும்பத்துக்கு நெருக்கமான எஸ்.சரவணன் என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத் தது. அவர் கடந்த 10-ம் தேதி டெல்லியில் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு முன் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். இதுதவிர வேறு சில சாட்சியங்களும் கிடைத் துள்ளதாக கூறப்படுகிறது. இத னால் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்த உதவியாளர் ஆகி யோருக்கும் விரைவில் சம்மன் அனுப்பவும் சிபிஐ திட்ட மிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் விசாரணைக்குச் செல்ல வில்லை என்று கூறினார். இது தவிர, கனிமொழிக்கு நெருக்கமான ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிக்கு வெளி நாடுகளில் இருந்து வந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் கம்பெனி விவகார அமைச்சகத்துக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதனால் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி கனி மொழி தாக்கல் செய்துள்ள மனு மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (கம்பெனி விவகார அமைச்சகப் பொறுப்பு அவ ரிடம்தான் உள்ளது) இது தொடர்பாக அதிமுக தலை மையிடம் பேசியதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன.
கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்க  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக