வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

அக்ஷய ட்ரஸ்டின் சுவர் ஏறி குதித்து நிர்வாணமாக ஒரு பெண் ஓடிவந்தார்!


Akshaya TrustA 23-year-old inmate who escaped from the Akshaya Trust home, founded by CNN hero Narayanan Krishnan, alleges that she was raped. This has cast a shadow over the non-profit organization, that houses mentally ill inmates in Madurai. A Ganesh Nadar/Rediff.com investigates the controversy.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் சமல் புரிந்து விட்டு பின்னர், வீதியில் உணவு இல்லாமல் தவித்தவர்களை கண்டு அவர்களுக்கு உணவு போடுவதே எனது முதல் நோக்கம் என்று புறப்பட்டவர், நாராயணன் கிருஷ்ணன். ஒரு முதியவர் உணவின்றி தாது கழிவையே சாப்பிடும் புகைப்படத்தை காட்டி, அனைவரையும் அழ வைத்த இவர் சி.என்.என் நடத்திய "ஹீரோ" போட்டியிலும் கலந்துகொண்டார். இவர் ஒரு இந்தியர் மிகவும் நல்லவர் என்று மக்கள் கருதி இவருக்கு வாக்களித்தார்கள் இதனால் கிருஷ்ணன் அதில் வென்று சி.என்.என் ஹீரோ ஆனால். இவரால் அக்சயா என்னும் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. . இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண்.
உடுத்த உடை கொடுத்து, சாப்பாடு கொடுத்து கிராம நல அலுவலரின் உதவியுடன் அருகில் வேலை செய்த கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அக்சயா ஆசிரமத்தில் சேவையோ தொண்டோ நடைபெறவில்லை. அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறார்கள். சுயமாகச் சிந்திக்க விடாமல் தினமும் மூன்று முறை போதை ஊசி போடுகிறார்கள். பாதி சாமத்தில் பெண்கள் அலறும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் அடுத்த அறையில் ஆபாசப் படம் காணொளி எடுப்பதையோ நிர்வாணமா ஆடவைத்துப் படம் எடுப்பதையோ பார்க்கலாம். ஆடைகளைக் கலைய மறுக்கும் பெண்களை அடிப்பார்கள். வாரம் ஒருமுறை யாராவது வெளிநாட்டுக்காரர்களைக் கூட்டிவந்து எங்களை வரிசையா நிக்க வச்சுப் பார்ப்பார்கள்.

அடுத்த 2 நாளில் அவங்க காட்டுனவங்க பிணமாகிடுவாங்க. சாகிறவங்க எல்லோரும் நைட்லதான் சாவாங்க. அதுவும் மயக்க மருந்துகூட கொடுக்காமல் உறுப்புகளை அறுத்தெடுக்கும் கொலை. ராத்திரியோட ராத்திரியா எரிச்சுடுவாங்க அல்லது புதைச்சிடுவாங்க. யூன் 4ம் திகதி வந்த வெள்ளைக்காரன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனதிலிருந்து எனக்குப் பயம் வந்திடுச்சு. கூட இருந்த பொண்ணுங்க ஆயிஷா, உனக்கு அய்ந்தாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லி அழுதாங்க. குளிக்கிறதாச் சொல்லிட்டு யூனிபார்மைக் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்து இவர்களிடம் அடைக்கலம் புகுந்தேன் என்று கூறியுள்ளார். ஆயிஷா சொன்ன தகவல்கள் குறித்து, கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்ட போது, அக்சயா ஆசிரமத்தில் நிறைய தப்புகள் நடப்பது உண்மை. மதுரை பெரியாஸ்பத்திரியில்கூட இவ்வளவு பேர் சாவதில்லை. மாதத்துக்கு 20, 25 பிணங்களை நாகமலை சுடுகாட்டுல எரிக்கவோ புதைக்கவோ செய்றாங்க என்று கூறியுள்ளார்.
மேலும், ஆயிஷாவுக்கு ஆடை கொடுத்து உதவிய பெண் கூறும்போது, அந்த ஆசிரமத்தில பொண்ணுங்க அலறுகிற சத்தம் நல்லா கேட்கும். நாம யாரும் அதுக்குள்ள போக முடியாது. இப்பக்கூட பொலிஸ் அதிகாரிகளைக்கூட உள்ள விடமாட்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே என்று கூறியுள்ளனர். பழைய வி.ஏ.ஓ.வும் உதவியாளரும்கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50_க்கும் அதிகமான சாவுகள் நடந்திருக்கின்றன என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியம் கூறியுள்ளார்.
உடற்கூறு பரிசோதனை இன்றி, ஊர் அலுவலருக்குத் தகவலும் இன்றி எரிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும், உடலுறுப்புகள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரித்து அறிக்கை தரவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊடகங்கள் உருவாக்கும் ஹீரோக்களின் மீதான பிம்பமும் நிஜத்திலும் உடையும் காலமிது! கிருஷ்ணன் அய்யர் மீது உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து கோரமுகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
உண்மையில் இது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு. இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்கர்களும், கனேடியர்களும் பல உலகநாட்டு மக்களும் இவர் CNN அறிமுகத்தில் ஹீரோவாக்கப்பட்டதும் இவரது தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவிகளை அளித்தனர். ஆனால் இவ்வளவு மோசமான குற்றச்சாட்டுகளுடன், நீதிமன்றம் வரை போன செய்திகள் இந்தியாவின் ஆங்கில இணையத்தளங்களில் வந்தும் கூட, அதற்கு யாரும் கருத்துத் தெரிவிக்காமல் அப்படியே அடக்கி வாசித்து விட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக