சனி, 21 பிப்ரவரி, 2015

திரையுலகை புதிதாக கலக்க வரும் ராகுல் பரீத்

மலையாளத்திலிருந்து தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள ‘பெங்களூர் டேஸ்'  படத்தில் சித்தார்த், சமந்தா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் சித்தார்த்-சமந்தாவுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இப்படத்திலிருந்து விலகினர். சமந்தா நடிக்கவிருந்த கதாபாத்திரம் ஸ்ரீதிவ்யாவுக்கு கைமாறியது. இந்நிலையில் அனு வைத்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவிருந்த படம் மற்றும் ராம் நடிக்கும் ‘பண்டக சேசுகோ'  பட வாய்ப்பும் சமந்தாவின் கை நழுவிப்போயிருக்கிறது. இதை ரகுல் ப்ரீத் சிங் கைபற்றி இருக்கிறார்.
என்னமோ ஏதோ, தடையற தாக்க படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படம் மூலம் டோலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர்கள் கவனத்தை தன் பக்கம் திரும்ப்பிய அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த கரன்ட் தீகா, ரஃப் படங்களும் நல்ல பேரை பெற்றுத் தந்ததால் மவுசு கூடியது. ரவிதேஜாவின் ‘கிக் 2'  படத்தில் நடிக்க ஹன்சிகா, தமன்னா பெயர் அடிபட்டு வந்தது. தற்போது அப்படமும் ரகுலுக்கு கிடைத்திருக்கிறது. இவரது திடீர் வேகம் இளம் ஹீரோயின்கள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக