செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மியின் வெற்றி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை: மம்தா பானர்ஜி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி தேர்தல் வெற்றி இந்திய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அராஜகவாதிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வி. அரசியல் லாபங்களுக்காக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பவர்களுக்கு கிடைத்துள்ள தோல்வி" என தெரிவித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், "நம் தேசத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி வெற்றியில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அனைவருக்கு எங்கள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்  /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக