வியாழன், 26 பிப்ரவரி, 2015

700 கோவில்களில் அதிமுகவினர் ஜெயாவின் விடுதலைக்காக மரம் நட்டனர்! ஜோதிடர் குறிந்த நேரத்தில் ...

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.   இந்த வைபவத்திற்காக தான் சட்டசபையை 4 நாளோடு முடிச்சிக்கிட்டாங்க போல....இந்த ரேட்டில் போனால் விரைவாக கிமுவுக்கு போய்விடலாம் . இதுதான்யா time travel ங்கிறது 



இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக