சனி, 14 பிப்ரவரி, 2015

குஜராத் கலவர வழக்கில் அனைவரும் விடுதலை ! 2-3-2002 கலவரத்தில் 14 முஸ்லிம்கள் பலியாகினர்.

கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள சேஷன் நவா என்ற கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 70 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மேற்படி குற்றங்களை நிரூபிக்க போதுமான சாட்சியங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் அவர்கள் அனைவரும் இன்று வழக்கில் இருந்து விடுவித்து பன்சகந்தா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2-3-2002 அன்று ஏற்பட்ட இந்த கலவரத்தில் 14 முஸ்லிம்கள் பலியாகினர். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்துக்கள் 2 பேர் பலியாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர்கள் 70 பேரும் கும்பலாகச் சென்று தாக்குதலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்களை நிலைநிறுத்துவதில் போலீஸ் தரப்பு தோல்வி அடைந்துள்ளது என்பதால் போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என பனஸ்கந்தா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வி.கே.புஜாரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக