வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஏன் பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி?

பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சத்துக்கும் கூடுதலான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் காலியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. சு.மாதேஸ்வரன் (அதிமுக) கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
தமிழகத்தில் 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 546 தனியார் சுயநிதி கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தமாக 2.98 லட்சம் இடங்கள் உள்ளன. அதில், ஒவ்வோர் ஆண்டும் கலந்தாய்வு மூலமாக 1.67 லட்சம் இடங்கள் வரை நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 1.30 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் ஆண்டுதோறும் காலியாக உள்ளன என்றார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக