வியாழன், 15 ஜனவரி, 2015

துப்பாக்கி உரிமம் பெறுவது இனி சுலபம்! லைசென்ஸ் முறை எளிமையாக்கபடுகிறது!

புதுடில்லி: துப்பாக்கி உரிமம் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 55 ஆண்டுகள் பழமையான, ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது, பாதுகாப்பு கருதி ஒருவர் துப்பாக்கி வைத்து கொள்ள விண்ணப்பிப்பதற்கு, ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுத்து, உரிமம் வழங்க காலக்கெடு எதுவும் இல்லை என்பதால், மாதக்கணக்கில், அவை கோப்புகளில் தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, துப்பாக்கி உரிமத்திற்கான நடைமுறைகளை எளிமையாக்கவும், உரிமங்களை விரைந்து வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக, வரும் பார்லிமென்ட் கூட்டத்தில், ஆயுதங்கள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  ஏண்டா ஏன்? இந்தியா அமெரிக்காவா மாற வேண்டுமா? இனிமே ஸ்கூல் பசங்க எல்லாம் துப்பாக்கிய தூக்கிகிட்டு வந்து கிளாச்மேட்டை மிரட்டுவான்....டீச்சரை சுடுவான்..காலேஜ் பசங்க இதுவரைக்கும் கத்தி, அரிவாள் உருட்டுக்கட்டை வச்சு சண்டை போட்டுக்கிட்டு இருந்தானுங்க..இனிமே துப்பாகியோட வருவானுங்க... எல்லா அரசியல்வாதி கையிலயும் துப்பாக்கி இருக்கும்...அமெரிக்கா மாதிரி நாம சுட்டு சுட்டு விளையாடுவோமா? குப்பனுக்கும் சுப்பனுக்கும் லைசென்ச கொடுப்பதாக செய்தி இல்லை....
இந்த சட்ட திருத்தத்தில், குறிப்பிட்ட துப்பாக்கி வகைகளை தயாரிக்க, தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான அம்சங்களும் இடம் பெறும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார். தற்போது, ஒற்றை மற்றும் இரட்டை குழல் துப்பாக்கிகளை தயாரிக்க, 95 தனியார் நிறுவனங்கள் மட்டும் அனுமதி பெற்றுள்ளன. கடந்த, 2002ம் ஆண்டு, பாதுகாப்பு துறையில், 26 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மூன்று நிறுவனங்களுக்கு, பலதரப்பட்ட துப்பாக்கிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.



களமிறங்கும்...:

இந்நிலையில், கடந்த ஆண்டு, பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பில் மேலும் பல நிறுவனங்கள் களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், ஆயுதங்கள் தயாரிப்பு துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக