வெள்ளி, 2 ஜனவரி, 2015

மணல் வைகுண்டராஜன் தலைமறைவு ! சிபிஐ யின் நான்கு கோஷ்டிகள் தேடுகின்றன!

<சிபிஐ ஸ்பெஷல் டீம் கிடுக்கிப்பிடி: வைகுண்டராஜன் தலைமறைவு முன்னாள் தூத்துக்குடி துறைமுக பொறுப்புத்துறை கழக தலைவர் சுந்தரம் ஐஏஎஸ். இவர் 2012-ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசனை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் வைகுண்ட ராஜன். இந்த மனு தள்ளுபடி ஆனதும் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி விடுமுறை கால மதுரை உயர்நீதிமன்றத்தில், ஜாமீன் மனு மீதான விசாரனையை முன் கூட்டியே விசாரிக்ககோரி வைகுண்டராஜன் தரப்பு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்று சிபிஐ, நான்கு ஸ்பெஷன் டீம்கள் அமைத்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொச்சின், மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் வைகுண்டராஜனை தேடியது. இது தெரிந்ததும் வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக