அடுத்த மாதம் 7ல், நடைபெற உள்ள டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,
முதல்வர் வேட்பாளராக, நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி,
65, அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என
எண்ணிய, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 46, இதனால், மிகுந்த
பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 'இரும்பு மனுஷிக்கும், ஓடிப்போன நபருக்கும்
இடையிலான போட்டி இது' என, பா.ஜ., வர்ணனை செய்துள்ளதை அடுத்து, தேர்தல்
பிரசாரம் கடும் சூட்டையும் கிளப்பியுள்ளது.சமூக ஆர்வலர் அன்னா
ஹசாரேயின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பில் முக்கிய பங்காற்றியவர்கள்
தான், கிரண் பேடியும், கெஜ்ரிவாலும். இப்போது, இருவரும், அரசியலில்
நேருக்கு நேர் எதிரிகளாக மாறியுள்ளனர்.
இருவருக்கும் இடையே, நேற்று நடைபெற்ற அறிக்கை விவாதம்:
கெஜ்ரிவால்: பொது மேடையில், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? ஜாதி, மதத்தை பார்த்து தான் மக்கள், ஓட்டளிக்கின்றனர். முக்கிய விவகாரங்கள் பற்றி, அவர்கள் யோசிப்பதில்லை. வாருங்கள், 12 மணி நேரம் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம்.
கிரண் பேடி: நான், தெரு விவாதத்திற்கு தயாரில்லை; வேண்டுமென்றால், சட்டசபையில் சந்திப்போம். நேற்று வரை நேர்மை சிங்கம் வேஷம் போட்ட கிரண் பேடி எப்படியாவது குறுக்கு வழியில் முதல்வராகலாம் என்று நினைப்பது கேவலம்
எதற்கு எடுத்தாலும் விவாதம் நடத்துவது தான் கெஜ்ரிவாலின் பழக்கம்; நான் அப்படியில்லை; செயல்பாடு அவசியம் என, கருதுபவள்; வீண் விவாதத்திற்கு நான் தயாரில்லை.
கெஜ்ரிவால்: 'டுவிட்டர்' இணையதளத்தில், உங்களை நான் பின்தொடர்ந்து வந்தேன். அதை நீங்கள் தடை செய்து விட்டீர்கள்; தடையை விலக்குங்கள்.
கிரண் பேடி: பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், என்னை பின் தொடர தடை செய்யவில்லை; 15 மாதத்திற்கு முன்பே தடை செய்து விட்டேன். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்து வரும் நபர், என்னை பின்தொடர வேண்டாம் என கருதி, ஓராண்டிற்கு முன்பே, உங்களை தடை செய்து விட்டேன்.
இதற்கு பதிலடி தரும் வகையில், 'பகிரங்க விவாதத்துக்கு வர, தயங்குவதன் மூலம், கிரண் பேடி பயப்படுகிறார்' என, ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவர் அசுதோஷ், குற்றம்சாட்டினார். இதற்கிடையில், 'மக்கள் மத்தியில், பகிரங்க விவாதம் நடத்துவதில், பங்கேற்பதற்கு நான் தயார்' என, காங்., செய்தித் தொடர்பாளர் அஜய் மேக்கனும், அறிவித்து உள்ளார். இதையடுத்து, பா.ஜ., - காங்., - ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சி யின் தலைவர்களையும், ஒரு சேர அழைத்துவிட வேண்டுமென்பதில், முக்கிய, 'டிவி' சேனல்கள் மத்தியில், போட்டா போட்டி யும் துவங்கி உள்ளது.கடும் குளிர் நிலவி வரும் டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கிரண் பேடிக்கும் இடையில், நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சட்டசபைத் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
ஐ.ஐ.டி., கெஜ்ரிவாலை எதிர்க்கும் 'லண்டன் ஸ்கூல் ஆப் காமர்ஸ்': டில்லி சட்டசபையின், புதுடில்லி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார், நுபுர் சர்மா, 30. இந்த தொகுதியில் தான், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிடுகிறார். கெஜ்ரிவால், ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில் படித்தவர்; நுபுர் சர்மா, லண்டன் ஸ்கூல் ஆப் காமர்ஸ்சில் படித்து பட்டம் பெற்றவர். கெஜ்ரிவாலை விட, தனக்கு கூடுதலாக, 10 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உண்டு என, கூறும் நுபுர் சர்மா, புதுடில்லி தொகுதியில், 'கெஜ்ரிவாலை மண்ணை கவ்வ வைப்பேன்' என, அதிரடியாக அறிவித்து உள்ளார்.
தவறிய கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த முறை போட்டியிட்ட, புதுடில்லி தொகுதியி லேயே போட்டியிடுகிறார். இத்தொகுதி யில் உள்ள, புகழ்பெற்ற வால்மீகி கோவிலுக்கு, நேற்று சென்று வழிபட்டு பின், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ, முக்கிய சாலைகளில், திறந்த டிரக்கில் வலம் வந்து, பிரசாரம் செய்தபடியே வந்தார். கட்சியினரின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, ஊர்வலம் மெதுவாக நகர்ந்தது. இதனால், உரிய நேரத்திற்குள்,அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இயலாமல் போனது. இதையடுத்து, இன்று, தன் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என, தெரிகிறது.
- நமது டில்லி நிருபர் - dinamalar.com
Finally, insecurity and jealousy has made India’s first woman IPS officer Kiran Bedi join BJP to reach the Delhi CM position in an easy way. That is the reason, that the party, she was standing against once (BJP) – now – standing with them. Too much of aspirations and jealousy (against Arvind Kejriwal) has made her join BJP whom she had been calling corrupt and what not along with Anna and Arvind Kejriwal

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக