சனி, 17 ஜனவரி, 2015

இந்திய அடையாளத்தை விரும்பாத பாபி ஜிண்டால் ! அமெரிக்கர்களாக மாறவே நாங்கள் வந்தோம்

வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் இந்தியர்களை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறு அமெரிக்காவில் உள்ளவர்களை குறிப்பிடுவதற்காக பரவலாக உபயோகிக்கப்படும் ஒரு சொற்பதமே இந்திய-அமெரிக்கர் என்பது. அப்படி அழைப்பதைத்தான் விரும்பவில்லை என்று இந்திய பெற்றோருக்கு பிறந்தவரும் அமெரிக்காவில் வசித்து வருபவரும் சமீபத்தில் லூசியானா மாகாண கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கருமான பாபி ஜிண்டால் கருத்து தெரிவித்துள்ளார். “என்னுடைய பெற்றோர் நாற்பது வருடங்களுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தது அமெரிக்கர்களாக வாழ்வதற்குத்தான். இந்திய-அமெரிக்கர்களாக வாழ்வதற்கு அல்ல. இணைப்புக்குறியீடு (-) கொண்ட அமெரிக்கனாக இருக்க நான் விரும்பவில்லை.  இந்த ஆளு  தன்னை  ஒரு  பரம்பரை அமெரிக்கனாக  காட்டி கொள்வதற்கு  மதம் மாறினார்.  . இவரது  லூசியானாவில்  கறுப்பினத்தவர் தொகை அதிகம்  , பிரித்தாளும் தந்திரத்தால்  பல வெள்ளையர்கள் இவருக்கு  வாக்களிக்கிறார்கள் . கறுப்பின வாக்களர்களின்  எதிர்ப்பை இவர் நிறையவே  சம்பாதித்துள்ளார்
அமெரிக்கா போன்ற பல கலாச்சாரங்களைக்கொண்ட மக்கள் வசிக்கும் இடத்தில் இன பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்கள் தர்மசங்கடத்தை உண்டாக்கும்” என்று ஜிண்டால் தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்கர் என்று அழைக்கப்படுவதை விரும்பாததற்கான காரணம் குறித்து அவர் அளித்த விளக்கத்தில் “அவர்கள் (ஜிண்டாலின் பெற்றோர்) இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவிலேயே இருந்திருப்பார்கள். அவர்கள் இந்தியாவை நேசித்தார்கள். ஆனால் அதிக வாய்ப்புகள் மற்றும் சுதந்திரத்தை தேடியே அமெரிக்கா வந்தார்கள்” என்று தெரிவித்தார்.

அடுத்த வாரம் லண்டனில் ஹென்றி ஜாக்சன் சமூகத்தினரிடையே ஜிண்டால் உரையாற்றவுள்ளார். இதற்காக தயாரிக்கப்பட்ட உரையில் மேற்கூறிய கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். இந்த உரையை வெளியிட்டுள்ள அவரது அலுவலகம், நாட்டை வலுப்படுத்தவும் புலம்பெயர்ந்து வந்தவர்களை ஒருங்கிணைக்கவும் லூசியானா கவர்னர் இவ்வாறு பேசவுள்ளதாக தெரிவித்துள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக