செவ்வாய், 6 ஜனவரி, 2015

தரூர் மனைவி சுனந்தா பொலோனியம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார்! போலீஸ் அறிக்கை

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி இன்று தெரிவித்தார்.பொலோனியம் எனப்படும் பாம்பு விஷம் அவரது உடலில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இது ரஷ்யாவில் கிடைக்கும்  சுனந்தா கொலை செய்யப்பட்டிருப்பார் என்று அவர் இறந்த 5வது வாரத்திலேயே தெரிவித்தவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. சுனந்தா உண்மையை தெரிவிக்க விரும்பியதால் கொலை, தரூர் ஒரு பொய்யர்: சு.சாமி இந்நிலையில் இது குறித்து சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனந்தாவுக்கு முக்கியமான ஏதோ பற்றி தெரிந்துள்ளது. அது குறித்த உண்மையை அவர் வெளியே கூற விரும்பியதால் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பிணமாகக் கிடந்த ஹோட்டல் ஊழியர்களையும் விசாரிக்க வேண்டும். சசி தரூர் ஒரு பொய்யர். அவர் எவ்வளவு பேசுகிறாரோ அவ்வளவு பிரச்சனையில் சிக்க உள்ளார். இது பணம் தொடர்பான கொலை என்று டெல்லி போலீசார் துணிச்சலாக வழக்குப்பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சுனந்தா கொலை குறித்து பொது நல வழக்கு தொடர உள்ளேன் என்றார். சுனந்தாவின் மரணம் கொலை தான் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரின் உறவினர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்./tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக