சென்னை: தி.மு.க. பொருளாளர் வருங்காலத்தில்தான் கட்சியின் தலைவர்
என்று அக்கட்சி பொதுச்செயலாளர் க. அன்பழகன் பொதுக்குழுவில் பேசியிருப்பது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின் கட்சியின் துணைத் தலைவர்
அல்லது செயல் தலைவர் பதவியை பெறுவதில் தீவிரமாக இருந்து வந்தார். அது
நடைபெறாத நிலையில் திடீரென பொதுச்செயலாளர் பதவிக்கு அடிபோட்டதாக கடந்த
வாரம் பரபரப்பு கிளம்பியது.
அதுவும் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு
வெளியான நிலையில் பொதுச்செயலாளர் பதவியை தர மறுத்ததால் கட்சியின் அனைத்து
பொறுப்புகளில் இருந்தும் ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது.
பின்னர் ஸ்டாலின் இதை மறுத்திருந்தார்.
ஸ்டாலின்
இந்த நிலையில் சென்னையில் இன்று தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவராக கருணாநிதி, பொதுச்செயலாளராக
அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின்
மகளிர் அணிச் செயலாளராக கனிமொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட
செயலாளர்களான ஆவுடையப்பன், நேரு, பொன்முடி, நாகை விஜயன், நீலகிரி முபாரக்
மற்றும் ஜெ. அன்பழகன் ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஏற்புரையாற்றினர்.
அப்போது பேசிய க. அன்பழகன், தி.மு.க.வின் தலைவர் கருணாநிதிதான்... அவரைத்
தவிர வேறு யாரும் அந்தப் பதவியில் உட்கார முடியாது. தம்பி மு.க.ஸ்டாலினைப்
பொறுத்தவரையில் அவர் வருங்காலத் தலைவர்.. அதாவது வரும் காலத்தில் ஸ்டாலின்
தான் தலைவர் என்று திரும்ப திரும்ப குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இதன் மூலம் கருணாநிதியும் தானும் இருக்கும் வரை ஸ்டாலின் தலைவர் அல்லது
பொதுச்செயலர் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம் என்று மறைமுகமாக அழுத்தமாக
சுட்டிக்காட்டியிருப்பதாகவே தி.மு.க.வினர் கூறுகின்றனர். அன்பழகனின் இந்த
பேச்சை ஸ்டாலின் ஆதரவாளர்கள் ரசிக்கவும் இல்லை என்கின்றனர் தி.மு.க.
தொண்டர்கள்.tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக