பீட்சா படத்துக்கு பிறகு மளமளவென ஒப்பந்தம் ஆவார் என்று ரம்யா நம்பீசன்
பற்றி கோலிவுட்டில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
டமால் டுமீல் என்ற படத்தில் நடித்தார். பிறகு 2 பின்னணி பாடல்கள் பாடினார்.
மலையாளத்தில் பிஸியாக படங்களில் ஒப்புக்கொண்டதால் தேடிவந்த தமிழ் படங்களை
நடிக்க முடியாமல் போய்விட்டது என்று அவரது தரப்பில்
கூறப்படுகிறது.மலையாளத்தில் அப்படியென்ன படம் நடிக்கிறார் என்று
விசாரித்தபோது அருண் சேகர் இயக்கும் ஜிலேபி என்ற படத்தில் நடிக்கிறார்.
ஹீரோ ஜெயசூர்யா. இதில் ரம்யாவுக்கு மாறுபட்ட வேடம் என்று பதில் வந்தது.
மாறுபட்ட வேடம் என்றால் புரட்சி பெண்ணாக நடிக்கிறாரா? என்றதற்கு 10 வயது
மகன், 6 வயது மகள் என இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் என்று
சிரிக்கிறார்கள் மல்லுவுட்டார்..tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக