Uttar Pradesh: A 14-year-old girl was allegedly abducted and gang-raped by two constables inside a police station here in Uttar Pradesh, prompting the authorities to suspend the accused who are absconding. உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ்
நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும்
இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில்
உள்ள குளியலறைக்கு அந்த சிறுமி சென்றாள். அப்போது, வீட்டு வாசலில் ஒரு கார்
வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இரண்டு போலீசார் அந்த சிறுமியை
அருகில் வரும்படி சைகை காட்டி அழைத்தனர்.
காரருகே சென்ற சிறுமியை பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு மின்னல்
வேகத்தில் அந்த காரை முஸாஜக் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றனர். போலீஸ்
நிலையத்துக்குள் இருந்த ஒரு அறைக்குள் சிறுமியை இழுத்துச்சென்ற அவர்கள்,
அவளை மிரட்டி, அடித்து, சித்ரவதை செய்து கற்பழித்தனர்.
பின்னர், அதே காரில் ஏற்றிக்கொண்டுவந்து அவரது வீட்டில் இறக்கி விட்டனர். வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறிய அந்த சிறுமி கதறியழுதாள். இதனையடுத்து, அவளது தாயார் அளித்த புகாரில் முஸாஜக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட போலீசார் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து பதான் நகர போலீஸ் சூப்பிரண்ட் இன்று உத்தரவிட்டுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக