சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி
மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்
சங்கத்தின்(பபாசி) சார்பில், புத்தக கண்காட்சி நேற்று முன்தினம்
தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 21-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது.
புத்தக கண்காட்சியின் 2-வது நாளான நேற்று (சனிக்கிழமை) புத்தகங்களை வாங்க
பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். கண்காட்சிக்கு
அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.மக்களின் வசதிக்காக, கண்காட்சி அமைப்பாளர்கள் பிரத்யேகமான வாகன
நிறுத்தங்களை அமைத்திருந்தனர். இந்த புத்தக கண்காட்சியின், 2-வது நாளான
நேற்று பல்வேறு புதிய நூல்களின் வெளியீட்டு விழாக்கள் மற்றும் கவிஞர்கள்,
தமிழ் அறிஞர்களின், கவியரங்கங்கள், கருத்தரங்கங்களும், மாணவர்கள்
பங்கேற்கும் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன.
புத்தக கண்காட்சியின் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில புத்தகங்களை வாங்குவதற்கு கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். மேலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களை வாங்குவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
இது தவிர தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும், தமிழ் இலக்கியம் மற்றும் புராண இதிகாச புத்தகங்களையும் வாங்கி சென்றனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக