திருச்சி ஸ்ரீரங்கத்தில் 10.01.2015 அன்று
நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய
கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்
ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்பட்டோர் இந்த பார்ப்பனிய பண்பாட்டு
நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி ஸ்ரீரங்கத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த விழாவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டரை பல்லக்கில் உட்கார வைத்து அதே சமூகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தூக்கிச் சென்று அவரது வீட்டில் விடுவதை ஒரு முறையாக வைத்து நடத்துகின்றனர். மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இந்த பார்ப்பனிய இழி செயலுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது.
மனிதனை மனிதன் சுமப்பது குற்றம் என்று வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே இந்த பார்ப்பன பண்பாட்டு அடிமைத்தன விழாவை எந்த சட்டத்தையும் மதிக்காமல் எடுத்து நடத்துகிறது இந்த பார்ப்பனக் கூட்டம். அதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது போலீசு அடியாள் கூட்டம்.
இதைக் கண்டித்து போராடிய அமைப்பினரை கைது செய்து இந்த நாட்டின் சட்டத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். கைதாகி மண்டபத்தில் இருந்த போது நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இதில் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதுவரை நமது பாடல்களை நேரடியாக நெருக்கமாக கேட்காத தி.க தோழர்கள் நமது பார்ப்பனிய எதிர்ப்பு பாடல்கள், மீத்தேன் எதிர்ப்பு பாடல்களை கேட்டதும் உற்சாகமாகி, “உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் பாடுகிறீர்கள்” என பாராட்டினர்.
தி.க வை சேர்ந்த தோழர். விடுதலை அரசு அவர்கள் பேசும் பொழுது, “தமிழகத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒரு எழுச்சிகர போராட்டம் ம.க.இ.கவின் கருவறை நுழைவு போராட்டம் தான். நாம் பார்ப்பனிய பாசிச கருத்தை முறியடிக்க வேண்டுமானால் ம.க.இ.க தோழர்கள் போல் வீதிக்கு வீதி பறையடித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் இந்த பார்ப்பனியத்திற்கு எதிராக மக்களை திரட்ட முடியும்” என்று பேசினார்.
ம.க.இ.க தோழர் லதா திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நாம் நடத்திய போராட்ட அனுபவம் பற்றி பேசினார்.
புரட்சிகர கலை நிகழ்ச்சியை தோழர். சத்யா தொகுத்து வழங்கினார். நமது பாடல்களை கேட்டு கொண்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நமது தோழரை அழைத்துச் சென்று, “பாடல்கள் எல்லாம் சிறப்பாக உணர்ச்சியூட்டும்படி இருக்கிறது. அந்த பாட்டை எல்லாம் எனது செல்போனில் ஏத்திவிடுங்கள்” என கேட்டு ஏற்றிச் சென்றார்.
திராவிட கழகத் தோழர் ஒருவர் பேசும் பொழுது, “எல்லா தோழர்களும் பார்பனியத்தை கண்டித்து உணர்வு பூர்வமாக பேசினார்கள். இதில் கலந்து கொண்ட சில தோழர்கள் 50 வயதிற்கும் மேலானவர்கள். ஆனால் அவர்களின் பேச்சும், போராட்ட துடிப்பும் 20 வயது இளைஞர்களின் துடிப்பை காண முடிந்தது. தொந்தியை வளர்த்துக் கொண்டு பாலும், நெய்யுமாக தின்று கொழுத்த பார்ப்பனர்கள் நடக்க கூட முடியாமல் மற்ற மனிதர்களை சுமக்கச் சொல்லி பிரம்ம ரதம் என்ற பெயரில் சோம்பேறியாக உட்கார்ந்து போகும் பார்ப்பான் தன்மான மனிதனா? இல்லை 60 வயதிலும் உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் இந்த பார்ப்பன பன்பாட்டுக்கு எதிராக களத்துலே இறங்கி போராடும் இந்தத் தோழர்கள் தன்மானமுள்ள மனிதர்களா?” என்றார்.
பெரியார் சொன்னார், “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்று அந்த மானத்தை காக்க இன்று கட்சி பாராமல் முற்போக்கு சிந்தனையுள்ள அமைப்புகள் இந்த பார்ப்பனிய பண்பாட்டுக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்கள். இந்த பார்ப்பனிய பண்பாட்டை பாடைக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது.
இப்படைக்கு தோற்பின் எப்படை வெல்லும்………
செய்தி: வினவு.com
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக