வே.மதிமாறன் :
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய கிராமங்கள் முழுக்கவே அன்றும் இன்றும்
தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள்.
தொடர்ந்து கொடூரமான முறையில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால், கொலை
செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல்
கூட அல்ல, காரணமே இல்லாமல் வெறும் ஜாதி காழ்ப்புணர்ச்சியால் படுகொலைச்
செய்யப்படுகிறார்கள்.
பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத ஆதிக்க
ஜாதி வெறியர்கள் + பிற்படுத்தப்பட்டவர்கள் தன்னை ‘சூத்திரன்’ ‘பார்ப்பானின்
வேசி மகன்’ என்று இழிவு செய்கிற பார்ப்பனியத்திற்கு எதிராக இதுவரை எந்த
வன்முறையையும் நிகழ்த்தியதே இல்லை.
ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களை எந்த
வகையிலும் இழிவாக நினைக்காத, மரியாதையாக நடத்துகிற, பார்ப்பனியத்தோடு
எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்கிற தலித் மக்கள் மீதே, தொடர்ந்து வன்முறை
நிகழ்த்துகிறார்கள்;
அது மட்டுமல்ல, சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் பிறப்பு முதல் இறப்பு வரை குழந்தை பிறக்கும் நேரம் தொடங்கிக் கல்யாணம், கருமாதி, தேவசம், திதி, என்று தன் வாழ்வின் எல்லா முக்கியமானவற்றையும் பார்ப்பனியத்தின் காலடியில் சமர்ப்பித்தே முடிவெடுக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இன்றுவரை பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் ஜாதி ஆதிக்கத்தையும் சொகுசுடன் வாழ வைக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் பிறப்பு முதல் இறப்பு வரை குழந்தை பிறக்கும் நேரம் தொடங்கிக் கல்யாணம், கருமாதி, தேவசம், திதி, என்று தன் வாழ்வின் எல்லா முக்கியமானவற்றையும் பார்ப்பனியத்தின் காலடியில் சமர்ப்பித்தே முடிவெடுக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இன்றுவரை பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் ஜாதி ஆதிக்கத்தையும் சொகுசுடன் வாழ வைக்கிறார்கள்.
அதனால் தான் தலைவர் பெரியார் இடைநிலை
ஜாதியின் பார்ப்பனிய அடிமைத்தனத்தின் மீது காறி உமிழ்ந்தார். இந்தியாவிலேயே
அவர் ஒருவர் தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பார்ப்பனியத்திற்கான அடியாள்
வேலையை மிக இழிவான வார்த்தைகளால் தொடர்ந்து கண்டித்தார்.
அப்போதும் கூடப் பார்ப்பனர்களுக்கு எதிரான
வன்முறை வடிவமாக ஒருபோதும் அது மாறவில்லை. ஒரு பார்ப்பனர் கூடப் பெரியார்
இயக்கத்தவரால் கொலை செய்யப்படவில்லை. தாக்கப்படவில்லை.
மாறாக பார்ப்பனர்கள், பார்ப்பன அடியாட்களான
பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பெரியாரை தாக்கினார்கள், செருப்பால்
அடித்தார்கள். தலித் மக்களோ பெரியாரை ஒருபோதும் தாக்கியதில்லை.
‘புனிதப் பார்ப்பனியமும் அடியாள்
பிற்படுத்தப்பட்டவர்களும்’ இணைந்து, தலித் மக்கள் மீதான கொலைவெறித்
தாக்குதலை இப்போதும் தொடர்ந்து நடத்தியும் நியாயப்படுத்தியும்
வருகிறார்கள். எப்போதுமே தலித் மக்கள் தான் பல பகுதிகளில் உயிருக்கு பயந்து
வாழ்கிறார்கள்.
உண்மை இப்படி இருக்க, பிரச்சினையைத்
தலைகீழாக்கி, தலித் மக்களின் நிலையில் பார்ப்பனர்கள் வாழ்வதுப்போல்
‘பிராமணர்கள் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள்’ என்று ஒருவர் சொன்னால், அவர்
எவ்வளவு மோசமான தலித் விரோதப் பார்ப்பன ஜாதி வெறியராக இருப்பார்.
அப்படிச் சொன்னதை இன்னொருவர்
நியாயப்படுத்தி, ‘ஆமாம், பிராமணர்கள் உண்மையில் தமிழ்நாட்டில் பயந்து
கொண்டுதான் வாழ்கிறார்கள்’ என்று எழுதினால்… அவர் எப்படிப்பட்ட
‘எச்சக்கல’யாக இருப்பார்?
இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள்
எப்போதுமே, தலித் மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிற பிற்படுத்தப்பட்ட
ஜாதித் தலைவர்களைக் குறித்தும் ஜாதிகளைக் குறித்தும் ஒரு வார்த்தைக்கூடக்
கண்டிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தானே பார்ப்பனியத்தையும் இந்து
மதத்தையும் வாழவைக்கிறவர்கள்.
அவர்களைப் போலவே, இப்போது பலரால்
பேசப்படுகிற ‘தமிழ்த்தேசியம்’ பிற்படுத்தப்பட்ட + பார்ப்பனரல்லாத ஆதிக்க
ஜாதி உணர்வாளர்களின் தலித் புறக்கணிப்பு + பார்ப்பனிய ஆதரவு
தமிழ்த்தேசியமாகத்தான் இருக்கிறது. தலித் மக்கள் மீது வன்முறை நிகழும்போது
இவர்களின் கள்ளமவுனமே அதற்குச் சாட்சியாகிறது.
இது குறித்தும் ‘திராவிட – பெரியார்’
எதிர்ப்புப் பார்ப்பனர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல,
அவர்களை ஆதரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்கள், இவர்களைப் பச்சைத் தமிழர்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் விரும்புவதைத் தானே செய்கிறார்கள்?
ஏனென்றால் அவர்கள், இவர்களைப் பச்சைத் தமிழர்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் விரும்புவதைத் தானே செய்கிறார்கள்?
அதேப்போல் முற்போக்குப் பார்ப்பனர்கள்,
தன்னைத் தலித் ஆதரவாளனைப்போல் சித்தரித்துக்கொண்டு, அதன் மூலமாக அவர்கள்
பெரியாரை தான் அவதூறாக, பொய்யாகப் பிரச்சாரம் செய்வார்கள். காரணம்,
பெரியார் தானே பார்ப்பனியத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரானவர்.
பெரியாரை இழிவாகக் காட்டுவதின் மூலம்
எழுகிற எதிர்ப்பை சமாளிக்க, தலித் அரசியல் பேசுகிறவர்களைத் தனக்கு
அடியாட்களாகப் பயன்படுத்தித் தனக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாம்;
தலித் அரசியலை ‘இந்து+பார்ப்பனிய’ ஆதரவாக அல்லது பார்ப்பனியத்தை இந்து மத்ததை விமரிசிக்காத முறையாக மாற்றி விடலாம் என்கிற பெரிய திட்டத்தோடும்.
அப்படியே இந்து மதத்தின் தீவிர எதிர்ப்பாளரான பெரியாரை ஒழித்துக் கட்டலாம் என்கிற இன்னொரு முக்கியத் திட்டமும்.
தலித் அரசியலை ‘இந்து+பார்ப்பனிய’ ஆதரவாக அல்லது பார்ப்பனியத்தை இந்து மத்ததை விமரிசிக்காத முறையாக மாற்றி விடலாம் என்கிற பெரிய திட்டத்தோடும்.
அப்படியே இந்து மதத்தின் தீவிர எதிர்ப்பாளரான பெரியாரை ஒழித்துக் கட்டலாம் என்கிற இன்னொரு முக்கியத் திட்டமும்.
ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா.
இப்படிப் பெரியார் எதிர்ப்புப்
பார்ப்பனியத்தைச் செய்கிறவர்கள், வைதிகப் பார்ப்பனர்கள் அல்ல, ‘பார்ப்பன
உணர்வே எனக்கில்லை’ என்று சொல்லுகிற முற்போக்குப் பார்ப்பனர்களே இந்த
மோசடிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள்
பெரியாரிஸ்டாகவும் தெரிவார்கள், நக்சலைட் போலவும் பேசுகிறார்கள்.
தலித் மக்கள்; இந்து மதத்திற்கு எதிராகக்
கிளர்ந்தெழும்போது, பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியலைச்
செய்வார்கள். அவர்களின் தலித் விரோத செயலுக்குத் துணை நிற்பார்கள்.
ஈடுபடுவார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து
இந்து+பார்ப்பனிய+ஜாதி x எதிர்ப்பாளர்கள் உருவானால், அவர்களை எதிர்கொள்ளப்
பார்ப்பனர்கள், தலித் மக்களின் தோழன் போல் செயல்படுவார்கள். இம்முறை
அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டர்கள்.
முற்போக்களார்களைத் தலித் விரோதிகளாகச் சித்தரிப்பார்கள்.
பாரதியார் போன்ற முற்போக்குப்
பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வரலாறு நெடுக இந்தச் சாணக்கிய தந்திரம் தான்
பார்ப்பனியத்தைத் தொடர்ந்து உயிர்ப்போடு வாழ வைக்கிறது. இப்போதும் அதுவே
நடக்கிறது.
‘பாவம் அவர்கள் பிராமணர்கள் – அதுவும் கலை, இலக்கிய முற்போக்குப் பிராமணர்கள்’ – ‘ஒரு பாவமும் அறியாதவர்கள்’
‘இந்த நாட்டில் ஜாதி வெறியிலிருந்து… எல்லா மோசடிகளையும் பிராமணரல்லாதவர் மட்டும்தான் செய்வார்கள். பிராமணர்களோ எப்போதும் போல் எறுப்புக்கு உணவளித்துக்கொண்டு இருப்பார்கள் mathimaran.wordpress.com
‘இந்த நாட்டில் ஜாதி வெறியிலிருந்து… எல்லா மோசடிகளையும் பிராமணரல்லாதவர் மட்டும்தான் செய்வார்கள். பிராமணர்களோ எப்போதும் போல் எறுப்புக்கு உணவளித்துக்கொண்டு இருப்பார்கள் mathimaran.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக