வியாழன், 1 ஜனவரி, 2015

காங்கிரஸ்: நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை ஆதரிக்க முடியாது

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, விவசாயிகளுக்கு விரோதமாகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காத நிலையில் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது. எனவே நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டு கூட்டத்தைக் கூட்டி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக