சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி என,
அறிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தொகுதியை மீண்டும் கைப்பற்ற,
29 அமைச்சர்கள், எட்டு எம்.பி.,க்கள் உட்பட, 50 பேரை, தேர்தல்
பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்று, ஜாமினில் வெளி வந்த பிறகு, ஜெயலலிதா அமைதியாக உள்ளார்.
போயஸ் கார்டனை விட்டு, எங்கும் செல்வதில்லை; பொது நிகழ்ச்சிகளிலும், கலந்து
கொள்வதில்லை. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது.இந்நிலையில்,
ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த
மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.முந்திய தி.மு.க.,:பொதுவாக,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்,
முதலில் வெளியாகும். ஆனால் இம்முறை, தி.மு.க., முந்திக் கொண்டு, வேட்பாளரை
அறிவித்தது. 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஜெயலலிதாவிடம் தோல்வி
அடைந்த, ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இது,
அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொத்து குவிப்பு தியாகத்தை பற்றி ஸ்ரீ ரங்கத்தின் வீடு கக்கூஸ் எல்லாம் பரப்பி ஒட்டு பொறுக்கி ....வாழ்க?
உடனே சுறுசுறுப்படைந்த அ.தி.மு.க., தலைமை, வேட்பாளர் தேர்வை துவக்கியது.போட்டியிட விரும்பிய 12 பேரிடம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நேர்காணல் நடத்தி, மூன்று பேரை தேர்வு செய்தனர்.அவர்களில், திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலரும், வழக்கறிஞருமான வளர்மதியை, வேட்பாளராக ஜெயலலிதா தேர்வு செய்தார். நேற்று மதியம், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து, தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலையும், ஜெயலலிதா வெளியிட்டார்.
முதல்வர் பெயரில்லை:இந்தப் பட்டியலில், முதல்வர் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறவில்லை. அமைச்சர்கள் 29 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது.இது தவிர, அவைத் தலைவர் மதுசூதனன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட எட்டு எம்.பி.,க்கள்,, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ன் என, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில், வேட்பாளர் பெயரை அறிவித்ததுடன், தேர்தல் பொறுப்பாளர்களாக, 50 பேரை நியமித்து, ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது, எதிர்க்கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.
ஜெ.,யை சந்தித்து ஆசி: ஸ்ரீரங்கம் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆசி பெற்றார்.வளர்மதி நேற்று, சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதாவை சந்தித்து, ஆசி பெற்றார். அவரை அருகில் இழுத்து அணைத்தபடி, ஜெயலலிதா நின்ற வீடியோ காட்சி, 'டிவி'க்களுக்கு அனுப்பப்பட்டது. அதேபோல், புகைப்படம் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளி வந்த பின், ஜெயலலிதா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் என்பதால், வளர்மதி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்பேன்: 'தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறி, ஓட்டு கேட்பேன்' என, அ.தி.மு.க., பெண் வேட்பாளர் வளர்மதி தெரிவித்தார்.திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலரும், வழக்கறிஞருமான வளர்மதி, முதன் முறையாக, சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில், எனக்கு போட்டியிட வாய்ப்பளித்த, ஜெயலலிதாவிற்கு நன்றி. கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறி, ஓட்டு கேட்பேன்; இதுவே, நான்வெற்றி பெறுவதற்கு போதுமானது. வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
பெயர்: வளர்மதி
வயது: 50
படிப்பு: எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பி.எல்.,
கணவர்: சீதாராமன்
மகன்கள்: ஸ்ரீராம், ஹரிராம்.
கட்சி பதவி: 1993ல் இருந்து, கட்சியில் உறுப்பினராக உள்ளார். மாநகர் மாவட்ட இணைச் செயலராக உள்ளார்.
தேர்தல் அனுபவம்: திருச்சி மாநகராட்சி, 58வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மாநகராட்சி குழுத் தலைவராகவும் உள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக