வெள்ளி, 2 ஜனவரி, 2015

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இளம்பெண் சங்கீதா(24) கொலை? கேசை ஊத்தி மூட நித்தியானந்தா ......


திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. இவர், பி.சி.ஏ., படித்த பின்னர், கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். ஆசிரமத்தினர் உடனடியாக, சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு வரப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, நாவலூர் குட்டப்பட்டுக்கு வந்த உடலை அடக்கம் செய்துவிட்டனர்.சங்கீதாவின் மரணம் குறித்து, வெளியே பேசவோ, ஊடகங்களில் தகவல் தெரிவிக்கவோ கூடாது' என, குடும்பத்தினரிடம், நித்யானந்தா மடத்தில் உள்ளவர்கள் சத்தியம் வாங்கியிருப்பதாக, சங்கீதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில், தனது மகள் சங்கீதாவின் மரணத்தில் மர்மம் இருபபதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் அர்ஜுனன் புகார் கொடுத்தார. இந்த புகாரை முதலில் ஏற்க மறுத்த போலீசார், பின்னர் அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு கர்நாடகா மாநிலம், பிடரி காவல்நிலையத்திற்கு அனுப்பினர் ஜெ.டி.ஆர் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக