ஞாயிறு, 28 டிசம்பர், 2014

இன்னொரு வருங்கால தமிழக CM நிர்மலா சீதாராமன் : தமிழகம் எனக்கு செய்த சேவை என்ன ? இந்தி படிக்கவிடல்லையே?

எந்த சபையிலும், அன்னிய பாஷையான ஆங்கிலத்தில் பயமின்றி பேச முடிகிற என்னால், இந்திய மொழியான இந்தியில் பேச பயமும், தயக்கமும் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்; என்ன காரணம்?'' என, ஆவேசமாக கேள்வி எழுப்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இந்தி படிப்பது அவசியம்,'' என்றும் வலியுறுத்தினார். கோவையில் தொழில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த, நிர்மலா சீதாராமன், 'தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி: ஒவ்வொரு கட்சியும், தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது. அதன்படி பா.ஜ.,வும், தேசிய கட்சி என்ற முறையில், மொழிப் பிரச்னையை அணுகுகிறது.தமிழுக்கும், பா.ஜ.,வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர். ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், தமிழக மக்களை, அவர்களது உணர்வை பார்க்கிறோம். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்று தான், வட மாநிலங்களில், திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம். தாய், தாய் மொழி, தாய் தேசம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என வலியுறுத்துகிறோம். இந்த அய்யங்கார  அம்மணி இப்படியே பேசினால் இனி பொன் ராதாகிருஷ்ணன்  கூட வெற்றி பெறமுடியாதுல ?


தாக்கம்: தாய் மொழியை படிக்கக் கூடாது என்று, நாங்கள் எங்கும் கூறவில்லை. அதைக் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். அதே நேரத்தில், வேறென்ன மொழிகளை, அந்த குழந்தை படிக்க விரும்புகிறதோ, அவற்றையும் படிக்க அனுமதிக்க வேண்டும். இதுதான் மொழிக் கொள்கையில் எங்களது நிலைப்பாடு.இந்த நேரத்தில், எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். நான் தமிழகத்தில், மதுரையில் பிறந்தவள். மதுரை, திருச்சி, விழுப்புரம் என, பல ஊர்களில் படித்தேன்; வளர்ந்தேன்.நான் படித்த காலத்தில், இந்தி படிக்க விரும்பினேன். ஆனால், < அதை படிக்க விடாமல் தடுக்க, இங்கே எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. மூர்க்கத்தனத்தோடு போராட்டங்களை நடத்தினர். இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், என்னைப் போன்ற பலரை, இந்தி படிக்க விடாமல் தடுத்தனர். எங்கள் பக்கத்து வீட்டில் போய் இந்தி படிக்க விரும்பினாலோ, இந்தி பிரசார சபாவில் படிக்க விரும்பினாலோ, கெட்ட வார்த்தைகளால் திட்டினர்; இன்னும் அசிங்கமான பேச்சுகளையும்கேட்டிருக்கிறேன்.அதனால், எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. பிற்காலத்தில், எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர் மூலம் இந்தியை சொந்த ஆர்வத்தில் படித்தாலும், என்னால் பலர் முன்னிலையில் சரளமாக பேச இன்றும் பயமும், தயக்கமும் இருக்கிறது. ஆண் பாலுக்கும், பெண் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசி விடுவோமோ என்ற பயம், எனக்கு மனதளவில் பெரிய தடையாக அமைந்து விட்டது.அன்னிய பாஷையான ஆங்கிலத்தைப் படிக்கிறோம். அதில் என்னால் சரளமாக பேச முடியும். ஆனால், இந்திய நாட்டில் பிறந்த ஒரு மொழியான இந்தியில் பேச முடியவில்லை. இதுதான் தமிழகம் எனக்கு செய்த சேவையா? இரட்டை வேடம்: இந்த பாதிப்புக்கு யார் காரணம்; என்ன காரணம்? தமிழகத்தில் இந்தி படிக்க விடாமல் தடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் இந்தி படித்து விட்டனர். ஆனால், படிக்க விடாமல் தடுத்தது என்னை போன்றவர்களை தான்.திராவிட மாயை போல, இது தமிழ் மாயை. எல்லா குழந்தைகளும் தாய் மொழியும் படிக்க வேண்டும்; வேறு எந்த மொழிகளை படிக்க விரும்பினாலும், படிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை செய்து தருவது தான், வருங்கால சந்ததிக்கு செய்யும் சேவை.இதையெல்லாம் செய்யக்கூடிய ஒரு தலைமையை, தமிழகம் போன்று, ஒவ்வொரு மாநிலமும் எதிர்பார்க்கிறது. அதை தேசியக் கட்சியான பா.ஜ.,வும், மோடி தலைமையிலான மத்திய ஆட்சியும் உணர்ந்திருக்கிறது.இதைத் தான் தமிழகமும் எதிர்பார்க்கிறது; அதைத் தான்நாங்கள் செய்கிறோம். அந்த வகையில் தான் தமிழ் மொழியையும், திருவள்ளுவரையும், பாரதியாரையும் போற்றுகிறோம். இவ்வாறு, நிர்மலா சீதாராமன், பேட்டியில் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., இலக்கு என்ன?தமிழகத்திற்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வந்தார். தமிழகத்தில், 122 இடங்களை பிடிக்க வேண்டும்; 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திராவிட கொள்கை கோலோச்சுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?தமிழகம் மட்டுமல்ல, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கூட இதே போன்ற கேள்வியை எழுப்பினர். ஆனால், இன்று அங்கு பா.ஜ., உதவி இல்லாமல் ஒரு ஆட்சியை அமைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை நினைவில் வைத்தும், ஜம்மு - காஷ்மீர் மாநிலமும் ஒரு எல்லை மாநிலம் என்பதை கருத்தில் கொண்டும், உங்களின் 'திராவிட மாயை' கேள்விக்கு நீங்களே பதில் எழுதி கொள்ளுங்கள். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக