திங்கள், 15 டிசம்பர், 2014

உயிர்காக்கும் மருந்துகள் நோ ஸ்டாக்? சப்பிளையை குறைத்த நிறுவனங்கள்~!

புதுடில்லி:அத்தியாவசிய மருந்துகளுக்கு, மத்திய அரசு, விலை கட்டுப்பாடு விதித்துள்ளதால், மருந்து நிறுவனங்கள் அவற்றின் சப்ளையை குறைத்துள்ளன. இதனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து கிடைக்காமல், வேறு நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு, பொதுமக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.<விலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், 2013ல், 348 அத்தியாவசிய மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதனால், நோய் எதிர்ப்பு மருந்து, வலி நிவாரணி, நீரிழிவு, தலைவலி, புற்றுநோய் உட்பட, பல நோய்களுக்கான மருந்துகளின் விலையை, மருந்து நிறுவனங்கள், குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 11ம் தேதி, மேலும், 52 மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை கட்டுப்பாடு ஆணையம் (என்.பி.பி.ஏ.,) குறைத்தது. இதனால் எரிச்சல் அடைந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் லாப வரம்பு குறைந்ததால், விலை குறைக்கப்பட்ட மருந்துகளின் சப்ளையை குறைத்துவிட்டன.  மருந்து புரட்சி..ஒருபக்கம் அமெரிக்கால ஒப்பந்தம்,அதனால கேன்சர்,டையபெடிஸ் மருந்துங்க விலை உயர்வு,இன்னொரு பக்கம் கட்டுப்பாடு,அத்யாவசிய மருந்துகள் நோ ஸ்டாக்..பலே பலே.பலே...
எனவே, பல மருந்துகளுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதுஇது தொடர்பாக, மருந்து விற்பனையாளர் கூட்டமைப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலை கட்டுப்பாடு பட்டியலில், மருந்துகளை கொண்டு வரும்போது, அவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அல்பியுமின்' என்ற உயிர் காக்கும் மருந்து, சந்தைக்கு வந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. அதேபோல், எல்ட்ராக்சின் (தைராய்டு), ஓசிட் (அமிலத் தன்மை), சி.சி.எம்., (கால்சியம்) மற்றும் சைலோரிக் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.< சப்ளை துவங்கும்: ஆனால், இந்த புகாரை, மருந்து நிறுவனங்களில் ஒன்றான 'கிளாக்சோஸ்மித்கிளைன்' மறுத்துள்ளது.
இது பற்றி அந்த நிறுவனம் கூறுகையில், 'உற்பத்தி குறைவால், மருந்து சப்ளை சிறிது பாதிக்கப்பட்டுள்ளது; விரைவில் முழுவீச்சில் சப்ளை துவங்கும்' என, கூறியுள்ளது.'விலை கட்டுப்பாடு மருந்துகளின் சப்ளையை, அரசு கண்காணித்தால் மட்டுமே, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்' என, நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக