செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஸ்டாலின்:அடிக்கத்தானே பாய்கிறாய் அடி! அடிக்க பாய்ந்த அமைச்சர் வைத்திலிங்கம்!

சட்டமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  அதிமுக அமைச்சர் வைத்திய லிங்கம் மு.க.ஸ்டாலினை மிரட்டும் வகையில்  தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று,  2014, 2015ம் ஆண்டுக்கான செலவுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடைபெற்றது.   இந்த விவாத்தில் பங்கேற்றுப்பேசிய திமுக சட்டப்பேரவையின் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்  110வது விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சுமார் 31 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை நிதிநிலை அறிக்கையில்,  1751 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  எனவே, ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதி என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இனி ஏனைய அமைச்சர்களும் இதை பின்பற்றி அம்மாவின் குட் புக்கில் இடம்பெற போட்டி போடுவார்கள் .இனி நிச்சயமாக அடிவிழும்?  ஜெயலலிதா இதைதான் ரசிப்பார்!


அப்போது முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு அவையில் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் பேசினார்.  இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தொடர்ந்து பேச முற்பட்டபோது, அவரை பேசவிடாமல் ஆளூங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், எழுந்து நின்று மு.க.ஸ்டாலினை நோக்கி மிரட்டும் தொணியில் பேசினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், ஸ்டாலினை தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி வலியுறுத்தினார்.  இதையடுத்து அவரை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார்.

விவாதத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘’பினாமி முதல்வர்’’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டதும், அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, நாக்கை துறுத்தி மிரட்டிகொண்டே,  சட்டையை கழட்டிக்கொண்டு, அடிக்கப்பாய்வதுபோல் நடந்துகொண்டார்.  உடனே ஸ்டாலின் சட்டை பட்டன்களை அவிழ்த்து மார்பை திறந்துகாட்டி, ‘’அடிக்கத்தானே பாய்கிறாய், அடி’’ என்று கூறியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையில் எழுந்து நின்று கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்ட நிலையில், திமுக உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவே,  திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரவையில் தன்னை பேசவிடாமல் அமைச்சர் வைத்திலிங்கம் ரவுடி போல் மிரட்டினார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  

’’இது சட்டமன்றமா? சண்டியர் மன்றமா?’’ என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக