சனி, 13 டிசம்பர், 2014

ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் பணம் சம்பாதித்தை தவிர வேறு என்னதான் செய்தார்?

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள்... திருவிழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. இதே நாளில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வெளியாகி இருக்கிறது.. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.. வழக்கம் போல விடிய விடிய முழித்திருந்து அத்தனைவித அபிஷேகங்கள் மூலமாக "தங்கள் தெய்வத்துக்கு" "வழிபாடு" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.. அனேகமாக "கண்ணா! இத... இதத்தான் எதிர்பார்த்தேன்" என்பதுதான் ரஜினியின் எதிர்க்குரலாகவும் இருக்கலாம்.. தலையங்கம்: ரஜினிகாந்தின் திரை உலகப் பயணம் நீண்டது... இத்தனை ஆண்டுகாலம் உயர உயரப் பறந்து கொண்டே இருக்கிறார்.. இதனாலேயே அவரது சம்பளமும் பட வசூலும் "நூறுகள்" கோடிகளை தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது..காவிரி பிரச்சனையில்  முழுதமிழகமும் திரையுலகமும் சேர்ந்து நடத்திய  போராட்டத்தை ஊத்தி மூட தனியாக உண்ணாவிரத டிராமா அரங்கேற்றிய Fake நாயகன் .
அத்தனைவிதமான நடிப்புகளையும் வெளிப்படுத்துகிற அசாத்திய நடிகராக இருப்பதால் தொடர்ந்தும் "சூப்பர் ஸ்டாராக" ஜொலிக்கிறார். இப்படி தமிழ் மக்கள் கொண்டாடுகிற ஒரு தகத்தகாய "தலைவர்", "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று ஒற்றை வரி வாக்குறுதியை மறக்காமல் "ஒவ்வொரு" திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.. அவருக்கும் வயது 64 ஆகிவிட்டது.. இன்னமும் அவர் கொண்டாடும் தமிழகத்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம் (தனிப்பட்ட உதவிகளைத் தவிர்த்து) எம்.ஜி.ஆர். - ஆர்.எம்.வீரப்பன் மோதல் தொடங்கிய 1980களில் இருந்து ரஜினியின் "அரசியல் பிரவேச" எதிர்பார்ப்பு அத்தியாயம் தொடங்கியது.. பின்னர் 1990களில் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு பலமாக மையம் கொண்டது..1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் கூட அவரது "வாய்ஸ்" உதவியது. தலையங்கம்: இதனால் ரஜினியின் "அரசியல் பிரவேசம்" என்பதை விட "வாய்ஸ்" கொடுத்தாலே போதும் என்ற நிலை உருவாகி அரசியல் பெருந்தலைவர்கள் வாசல்படியில் காத்துக் கிடக்கத் தொடங்கினார்கள்.. அப்படி அவர் "வாய்ஸ்" கொடுத்தும் போணியாகாமல் போன காட்சிகளும் தமிழகத் தேர்தல் களத்தில் அரங்கேறின.. ஆனாலும் அசராத ரஜினிகாந்த் திடீரென நதிநீர் இணைப்புக்கு ரூ1 கோடி கொடுப்பதாக அறிவித்தார்.. அந்தத் திட்டத்தை முன்னெடுக்க துரும்பையும் கிள்ளிபோட்டதாக தெரியவில்லை.. 2002ஆம் ஆண்டு தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராத கர்நாடகத்துக்கு எதற்கு தமிழகத்து நெய்வேலி மின்சாரம் என்று கொந்தளித்த திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ளாத ரஜினி மறுநாள் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்து "தமிழ்நாட்டு" பாசத்தைக் காட்டினார்... இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமை சார்ந்த பிரச்சனைகளில் எப்போதுமே ஒதுங்கியே, மவுனமாக இருந்துவிடுவதுதான் ரஜினியின் இயல்பு. ஒருவேளை தங்களது உரிமைக்காக போராடும் தமிழ்நாட்டு மக்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி செய்ய நினைத்த "நல்லது" இதுதானா என்பதும் புரியவில்லை.. இந்த மண்ணின் மக்கள் வெறித்தனமான நேசித்து கொட்டும் காசில் உயரப் பறக்கும் ரஜினிகாந்த், வெறித்தனமாக இந்த மண்ணின் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டு உரிமைகளை மீட்டுத் தந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாதோ என்னவோ? ஆனால் ரஜினியின் சகோதரரோ தமிழ்நாட்டு மண்ணில் நின்று கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டலாம்; அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என்றெல்லாம் பேசிவிட்டு செல்கிறார். பின்னர் திடீரென மன்னிப்பும் கோருகிறார்.. தமிழ்நாட்டு ரசிகர்களும் செய்வதறியாமல் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.. தற்போது லிங்கா படம் வெளியாகி இருக்கிறது.. தமிழ்நாட்டின் "ஹாட் டாபிக்" முல்லைப் பெரியாறு... அதன் சாயலில் ஒரு படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்தாகிவிட்டது.. ஓட்டியாக வேண்டும் என்பதற்காக மீண்டும் இசைவெளியீட்டு விழாவில் "அரசியல் எனக்குத் தெரியாதுன்னு இல்ல.. தயக்கமாக இருக்கு" என்று சொல்கிறார்.. இதோ ரசிகர்களும் ரஜினி எதிர்பார்த்தபடியே "தலைவா! வா! தலைமை ஏற்கவா!! "இரண்டாம் பென்னிகுக்கே" என்று மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி தியேட்டர்களில் தவம் கிடக்கிறார்கள்.. (இரண்டாம் பென்னிக்குக் என்று ஜெயலலிதாவையும் அதிமுகவினர் சமீபத்தில் வர்ணித்து சந்தோஷித்தனர் என்பது நினைவிருக்கலாம்) இங்கிலாந்தில் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று பெரும் போராட்டத்தை நிஜவாழ்வில் எதிர்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு அணைகட்டியவர் "பெருமகனார்" பென்னிகுக்... ஆனால் தமிழ்நாட்டு மக்களின் காசில் "திரைப்படத்தில் அணைகட்டி" தனக்கு ஊதியம் பெறுகிறவர் ரஜினிகாந்த் என்ற உண்மையை உணரக்கூட முடியாத "மயக்கத்தில்" இருப்பவர்கள் தானே ரசிகர்கள்.பாவம்! நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அவர்களும் உணர்வதில்லை.. ஒருநாளும் ரஜினியும் திட்டவட்டமாக உணர்த்தப்போவதும் இல்லை.. அடுத்த திரைப்படத்துக்கு முன்பாகவும் ரஜினியின்- 'அரசியல் பரபரப்பு' பேச்சுக்கு எதிர்பார்த்து காத்திருப்போம்.. "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்ற "உத்தரவாத"த்துக்கு பொறுத்திருப்போம்.. அந்தப் படத்தையும் உலக திரைப்பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலை வாரித் தருவோம்- வரலாறு படைப்போம்! நல்லது மிஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீங்க நடத்துங்க 'எஜமான்!' தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்! by Taboola Sponsored Links YOU MAY LIKE Boeing Completes First Green Diesel Test FlightInvestors.com Where the Locals Shop in Tokyo [Slideshow]Kate Spade New York by AFAR 10 Most Popular Dog NamesAmerikanki The Top 5 Largest Aircraft in the WorldA Fun 4 You The 10 Most Beautiful and Attractive ActressesDipTap END OF THE WORLD - This Cyclone Can DO !!!Likey.today After reading this, you’ll never look at a banana in the same way againWorld Observer You’ll Be Amazed To See What This Husband Did After His Pregnant Wife’s Tummy Was…ViralFaze Kim and North Wore Matching Summer WhitesThe Cut Topics: editorial, rajinikanth, birth day, தலையங்கம், ரஜினிகாந்த், பிறந்த நாள், வாழ்த்துகள் English summary Superstar Rajinikanth celebrated his 64th birthdaday on Friday. Other articles published on Dec 12, 2014 Write a Comment செய்திகள் சினிமா தலையங்கம்: சிவப்பு கம்பளம் ராஜபக்சேவுக்கு.. சிறுத்தை காடு தமிழ் நிருபர்களுக்கு! தலையங்கம்: சிவப்பு கம்பளம் ராஜபக்சேவுக்கு.. சிறுத்தை காடு... தலையங்கம்: இருளில் கிடக்கும் மறுமலர்ச்சியை வைகோ வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இது... தலையங்கம்: இருளில் கிடக்கும் மறுமலர்ச்சியை வைகோ... ஆரம்பிச்சுட்டாங்கய்யா அக்கப்போர..! இந்திய-ஆஸி. வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷ வாய்ச்சண்டை! ஆரம்பிச்சுட்டாங்கய்யா அக்கப்போர..! இந்திய-ஆஸி. வீரர்கள்... மதுவிலக்கை அமல்படுத்தினால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: ஜெ. முதல்வராவார் - வைகோ மதுவிலக்கை அமல்படுத்தினால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு... மதுரை மதுரை "டான்" வரிச்சியூர் செல்வம் தேசிய பாதுகாப்பு... "குருமி சத்திரிய" ரஜினிக்கு கர்நாடக லிங்காயத்து சங்கம்,... தலையங்கம்: தலையங்கம்: "திரையில் அணைகட்டிய இரண்டாம்பென்னிகுக்'... நம்பினால் நம்புங்கள்... ஆப்கனிஸ்தானில் நம்பினால் நம்புங்கள்... ஆப்கனிஸ்தானில் "உயிர்த்தெழுந்த"... லிங்கா மாஸ், ஓ.கே., ராக்கிங், முடியல: ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து ஊர் ஊரா கலக்குதடி லிங்கா லிங்கா – லிங்கா படத்தின் 10 சுவாரசிய தகவல்கள்! உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது? ஜனவரி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை கணிசமாக உயருகிறது! கூகுள் விற்பனை மேளா, வியப்பூட்டும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சலுகைகள் 2015ஆம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் 11% உயரும்!! How to make homemade cooking spray Videos Dolly Ki Doli Official Trailer Dolly Ki Doli Official Trailer

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக