செவ்வாய், 9 டிசம்பர், 2014

சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சிக்கப்படும் அஞ்சான் / லிங்குசாமி.

பேட்டியில் விமர்சனங்கள் குறித்து பேசிய லிங்குசாமி “ரசிகர்களுக்கு நம்மிடம் என்ன பகை இருக்கிறது? எந்த நிலத் தகராறும் கிடையாதே. என்னிடம் அதிகமாக எதிர்பார்த்து, என்னிடம் அதிகமான மரியாதை வைத்தது என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்துகிறது. 'நம்மை திட்டுபவர்களைத்தான் நாம் அதிகம் திருப்திபடுத்த வேண்டும்' என சமீபத்தில் கமல் என்னிடம் கூறினார். அதைநான் தற்போது செய்துவருகிறேன். என் படங்களைத் தொடர்ந்து ரசிப்பவர்களை நான் ஏமாற்றியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, அடுத்ததாக சிறந்த படத்தை தர விரும்புகிறேன். ;எனது கடந்தகாலத்தை பார்த்தே நான் எனக்கு உத்வேகம் சொல்லிக் கொள்கிறேன். 'ஜி' படத்திற்கு பிறகுதான் 'சண்டக்கோழி' படத்தை எடுத்தேன். 'பீமா'விற்கு பிறகுதான் 'பையா' இயக்கினேன்.
இந்தத் துறையில், தொடர்ந்து நம்மை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது” என்றார்.மேலும் அஞ்சானின் தோல்வி குறித்து பேசியபோது “இசை வெளியீடு கூட வேண்டாம் என்றுதான் சொன்னேன். இப்போது நான் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை.நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை ஆனால் ட்விட்டர் போன்ற தளங்களில் படம் குறித்த எதிர்பார்ப்பு, வெளியீட்டிற்கு முன்பிலிருந்தே நிலவி வந்தது எனக்குத் தெரியும். இணையத்தில் அதிக லைக்குகள் பெற்றதினால் கேக் வெட்டியது குறித்து பலர் கிண்டலடித்தனர். இதெல்லாம் எங்கு சென்று முடியும் என அப்போது உணரவில்லை.நான் ஒரு மோசமான திரைப்படத்தைத் தரவில்லை என்றே நம்புகிறேன். குறைந்தது, இவ்வளவு விமர்சனங்களுக்கு ஆளாகும் அளவிற்கு மோசமான படம் இல்லை என்றே நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக