செவ்வாய், 9 டிசம்பர், 2014

உலகின் சிறந்த மனிதர் பயாஸ் கோப்பு...பாஜகவினர் இன்டர்நெட்டில் லைக்குகளை அள்ளிவீசி அவித்த TIME டைட்டில்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல "டைம்' வார இதழ் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வாகியுள்ளார்.
"டைம்' வார இதழ் சார்பாக, ஆன்லைன் முறையில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் "ஆண்டின் சிறந்த மனிதர்' பற்றிய முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில், மோடி 16 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வாகியுள்ளார்.
225க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் இத்தேர்தலில் பங்கேற்று வாக்களித்தனர்.இதே பாணியில் முன்பு bbc நடத்திய  இசைபோட்டியில் இதுவரை உலகில் தோன்றிய பாடல்களிலே அதி சிறந்த பாட்டாக அட்ரஸ் இல்லாத ஒரு புலி இயக்க பாடலை தெரிவு செய்தனர். அதை பின்பு புலிகள் பிரசாரத்திற்கு பயன்படுத்தினர். இந்த இண்டர்நஷனல் விளம்பர கூத்துக்களில் தெற்காசிய மக்கள்தான் அதிகம் பங்கு பற்றுபவர்கள் .எல்லாம் Inferiority Complex தான் அல்லது Identity Crisis என்றும் கூறலாம். 

இது குறித்து "டைம்' பத்திரிகை ஆசிரியர் குழு தெரிவித்ததாவது:
இந்தியாவில் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். எனினும், அவரது கடந்த காலச் செயல்பாடுகள் குறித்து அவரது அதிருப்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஆன்லைன் வாக்கெடுப்பில் பங்கேற்று மோடிக்கு வாக்களித்ததன் மூலம் அவர் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது என்று "டைம்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வாக வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஹாங்காங் போராட்டத் தலைவர் ஜோஷுவா வாங், நோபல் அமைதிப் பரிசை வென்ற மலாலா யூசஃப்சாய், எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஓராண்டு காலத்தில், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதரை "ஆண்டின் சிறந்த மனிதராக' "டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. 1927-ஆம் ஆண்டு முதல் இவ்வாறு அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக