வியாழன், 18 டிசம்பர், 2014

பாகிஸ்தானில் இனி ஒரு பயங்கரவாதியை கூட விட்டு வைக்க மாட்டோம்! நவாஸ் இம்ரான் கூட்டறிக்கை !


இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில், இனி, ஒரு பயங்கரவாதியை கூட, விட்டு வைக்க மாட்டோம். இதற்கான செயல் திட்டம், ஏழு நாட்களுக்குள் வகுக்கப்படும்' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கானும், கூட்டாக அறிவித்து உள்ளனர்.பாகிஸ்தானின், பெஷவார் நகரில், பள்ளி ஒன்றுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 141 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும், பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம், எதிரும், புதிருமாக இருந்த பாக்., அரசியல் கட்சிகளை ஒருங்கிணத்து உள்ளது.பாக்., பிரதமரும், பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான, நவாஸ் ஷெரீப்பும், பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய எதிர்க்கட்சியான, பாகிஸ்தான் தெரிக் - இ - இன்சாப்பின் தலைவருமான, இம்ரான் கானும், நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:
பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர், முழு வீச்சில் துவங்கி விட்டது. பாகிஸ்தானில், இனி, ஒரு பயங்கரவாதிக்கு கூட இடமில்லை. பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக, தேசிய அளவிலான செயல் திட்டம், ஏழு நாட்களுக்குள் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர் dinamalar.com. தாவூத் இப்ராகிமை கைது செய்து உடனே இந்தியாவுக்கு அனுப்புங்கள்... இந்தியாவும் கூட இனி தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து drone களை அனுப்பவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக