வெள்ளி, 12 டிசம்பர், 2014

ஸ்டாலினுடன் மோதல்: துரைமுருகன் ராஜினாமா?

வேலுார் மாவட்ட உட்கட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும். மூத்த துணை பொது செயலர் துரைமுருகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, துரைமுருகன், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் பரவிஇருக்கிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., உட்கட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட வாரியாக, கோஷ்டி பூசல் வெடித்துஉள்ளது. வேலுார் மாவட்ட தி.மு.க.,வில், மாவட்ட செயலர் காந்தி, துரைமுருகன் கோஷ்டி என, இரு கோஷ்டிகள் செயல்படுகிறது. இந்நிலையில், கட்சி யின் வேலுார் மத்திய மாவட்ட செயலராக கதிர் ஆனந்தை கொண்டு வருவதற்கு, உட்கட்சி தேர்தலில் துரைமுருகன் ஆதரவாளர்கள் பாடுபட்டனர். கட்சியின் கீழ் நிலை தேர்தல்களில் போட்டியிட்டு, துரைமுருகன் ஆதரவாளர்கள் நிறைய எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.இதனால், மாவட்ட செயலர் பொறுப்புக்கு தேர்தல் நடத்தும் பட்சத்தில், கதிர் ஆனந்த் எளிதாக வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்தது. இந்நிலையில், அவர் மாவட்ட செயலர் பொறுப்புக்கு திறமையானவர் இல்லை; அதனால், அவர் மா.செ., தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, துரைமுருகனிடம், ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதைதொடர்ந்து, கட்சி பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் கருணாநிதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது தினமலர்.com . கொஞ்ச நஞ்சம் ஸ்டாலினுக்கு பயப்படாமல் பேசக்கூடியவரும் வெளியேறுவது   திமுக இன்னொரு அதிமுகவாகி வருவதன் அடையாளம் , அங்கே ஜெயலலிதா அடிமைகள் இங்கே ஸ்டாலின் அடிமைகள்
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக