ஞாயிறு, 14 டிசம்பர், 2014

வெங்கையா நாயுடு: வைகோவை நாங்க சீரியஸா எடுத்துக்கல! அட அவரே அவரை ரொம்ப சீரியஸா எடுத்துக்க மாட்டாரு!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற ரோட்டரி சங்கம் சார்பிலான கருத்தரங்கில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால், எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதை யாரும் பெரிதாக கருதவில்லை. நாங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று கூறிய வைகோவை நாங்கள் பொருட்படுத்தவில்லை.தமிழக பத்திரிகையாளர்கள் திருப்பதில் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.nakkheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக